செய்திகள் :

ரஜத் பட்டிதருக்காக அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி! - நடந்தது என்ன?

post image

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

GT vs RCB Match
GT vs RCB Match

இந்த ஆட்டத்தின்போது ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ஆட்டமிழந்த விதம் குறித்து அதிருப்தி அடைந்த விராட் கோலி, மைதானத்தின் வெளியே இருந்த நான்காவது அம்பயருடன் ஆக்ரோஷமாக விவாதித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இந்த போட்டியில், அர்ஷத் கான் வீசிய எட்டாவது ஓவரில் படிதார் அடித்த பந்தை ஜேசன் ஹோல்டர் கேட்ச் பிடித்தார். ஆனால், அந்த கேட்சை பிடிக்கும் போது பந்து தரையில் பட்டதாக மறுஆய்வில் சந்தேகங்கள் எழுந்தன.

இருப்பினும், மூன்றாவது நடுவர் அந்த கேட்சை சரி என அறிவித்து படிதாரை ஆட்டமிழந்ததாக அறிவித்தார். ஏற்கனவே ஆட்டமிழந்து வெளியே அமர்ந்திருந்த விராட் கோலி, இந்த முடிவைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்தார்.

நடுவரின் தவறான முடிவால் அதிருப்தியடைந்த அவர், மைதானத்திற்கு வெளியே இருந்த நான்காவது நடுவரிடம் மிகவும் ஆவேசமாக வாதிட்டது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விராட் கோலி
விராட் கோலி

ஐபிஎல் விதிமுறைப்படி , ஒரு பீல்டர் பந்தை பிடிக்கும்போது கை தரையில் படலாம், ஆனால் பந்து தரையில் படக்கூடாது.

ஹோல்டர் பந்தை தரையில் தட்டியது போல் தெரிந்தும் நடுவர் அவுட் கொடுத்தது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

GT Vs RCB: "சுப்மன் கில் ஆடிய விதம் எங்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கியது" - ரஜத் பட்டிதார்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. GT vs RCB matc... மேலும் பார்க்க

GT vs RCB: ``எதிர்பார்த்ததை விட விக்கெட்டுகள் அதிகமாகவே விழுந்தன, ஆனாலும்..."- கேப்டன் சுப்மன் கில்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்-30) நடைபெற்ற பெங்களூரு vs குஜராத் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, அதை விரட்டி களமிறங்கிய குஜராத் அணியினர் அடுத்தடுத்து விக்கெட... மேலும் பார்க்க

"ஒரு வருடமாக எனது இடது தோள்பட்டையில் சில பிரச்னைகள் உள்ளன, ஆனாலும்.! - ஆட்டநாயகன் ஹென்றி கிளாசென்

ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல் 29) ஆட்டத்தில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத், மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி... மேலும் பார்க்க

IPL : "5 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஐபிஎல் வேறு, இப்போது இருக்கும் ஐபிஎல் வேறு"- SRH கேப்டன் கம்மின்ஸ்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்29) நடைபெற்ற மும்பை vs ஹைதராபாத் போட்டியில் மும்பை நிர்ணயித்த 244 என்ற இலக்கை 8 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளத... மேலும் பார்க்க

SRH Vs MI: 'எங்கள் ரசிகர்களுக்குக் கொண்டாடப் போதுமான வாய்ப்புகளை நாங்கள் தரவில்லை'- ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 29) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்தமும்பை அணி, 20 ஓவர்களில் 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர... மேலும் பார்க்க

IPL 2026: "அவர் பந்துகளை அடிப்பதை எதிர்முனையில் இருந்து பார்ப்பது.."- சூர்யவன்ஷி குறித்து ஜெய்ஸ்வால்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல். 29) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஜெய்ஸ்வால... மேலும் பார்க்க