GT Vs RCB: "சுப்மன் கில் ஆடிய விதம் எங்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கியது" - ரஜத் பட்டிதார்
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இதில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், " நாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாக இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
சுப்மன் கில் ஆடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அவர் ஆடிய விதம் எங்கள் மீது அழுத்தத்தை உண்டாக்கியது.
இந்தப் போட்டியில் இருந்து மிகத் தெளிவானப் பாடங்களைக் கற்றுக்கொண்டோம். தொடர் இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது, எனவே நாங்கள் ஒவ்வொரு போட்டியாகக் கவனம் செலுத்தி விளையாடுவோம்.
இப்போது புள்ளிப்பட்டியலைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களுடைய ஒரே நோக்கம் சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதுதான்" என்று பேசியிருக்கிறார்.















