செய்திகள் :

"இப்போது அவர் தமிழ்நாட்டின் 'ஜனநாயகன்' ஆகிவிட்டார்!" - பதவியேற்பு விழாவில் 'ஜனநாயகன்' தயாரிப்பாளர்!

post image

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். பல போராட்டங்களைத் தாண்டி இன்று காலை முதல்வராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய்.

விஜய்யுடன் நெருக்கமாக சினிமாவில் பல காலம் பயணித்த அவருடைய நண்பர்கள் பலரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துக் கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு, விஜய் ஆளுநரைச் சந்திக்க செல்கையில், இவருடன் உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் பற்றியும் பேசியிருக்கிறார்.

'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவரின் வெற்றியை எதிர்பார்த்துதான் நாங்கள் 'ஜனநாயகன்' என்ற தலைப்பைப் படத்திற்கு வைத்தோம். எல்லோரும் 'ஜனநாயகன்' என்பது ஒரு திரைப்படம் என்று நினைத்தார்கள்.

ஆனால் இப்போது அவர் தமிழ்நாட்டின் 'ஜனநாயகன்' ஆகிவிட்டார்." என்றவர், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் பற்றி, "மிக விரைவில். நாங்கள் சென்சார் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறோம்.

KVN கே.நாராயணா
KVN கே.நாராயணா

சான்றிதழ் கிடைத்தவுடன் படத்தை வெளியிடுவோம். தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் சாருக்கு எனது வாழ்த்துகள்.

ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. விஜய் சார் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

`விஜய் அண்ணா சொன்னதை செய்வார்; இனி எல்லாம் நல்லதாகவே...'- பதவியேற்பு விழாவுக்கு ஓடி வந்த நடிகர் ஜெய்

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். பல போராட்டங்களைத் தாண்டி இன்று காலை முதல்வராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய். விஜய்யுடன் நெருக்கமாக சினிம... மேலும் பார்க்க

Vijay: `கடல் வற்றும் வரை விஜய் மீது நான் கொண்டுள்ள அன்பு நிலைத்திருக்கும்!'- நெகிழும் நடிகர் ஶ்ரீமன்

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். பல போராட்டங்களைத் தாண்டி இன்று காலை முதல்வராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய். விஜய்யுடன் நெருக்கமாக சினிம... மேலும் பார்க்க

"வெயிலில் நின்றுகொண்டிருக்கும் பெண் காவலர்களுக்கு இதை செய்துக் கொடுக்க வேண்டும்!" - விஷால் கோரிக்கை

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்ச... மேலும் பார்க்க

TVK: "'சர்க்கார்' விஜய்யின் அரசியல் இலக்குகளைச் சொல்வதற்காகவே எடுக்கப்பட்ட படம்" - ஜெயமோகன்

,இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகவும் பதவி ஏற்கிறார் விஜய். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், தவெக-வுக்கு மக்கள் வாக்களித்து தனிப்பெருங்கட்சியாக உருவெடுக்கச் செய்திருக்கிறார்கள்.இன்று பத... மேலும் பார்க்க

VIJAY : லவ்வர் பாய் டு ஆக்ஷன் ஹீரோ! விஜய் நடித்த படங்களுக்கு ஆனந்த விகடன் மதிப்பெண்! | Full List

சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக தவெக உருவெடுத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகவும் பதவி ஏற்கிறார் விஜய். 'நாளை தீர்ப்பு' திரைப்படத்தின் மூலம் சினிமா... மேலும் பார்க்க

29 Movie Review: திகட்ட திகட்ட எடுக்கப்படும் காதல் பாடங்கள் - படிக்க சுவாரஸ்யம் தருகிறதா?

சேலத்திலிருந்து சென்னைக்குப் பணி நிமித்தமாக வருகிறார் சத்யா (விது). அவருக்குள் 'நான் யார்?', 'என்னுடைய அடையாளம் என்ன?' என்கிற கேள்விகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்கான விடையைத் தேடும் பயணத்தில் இருக்... மேலும் பார்க்க