’முதலமைச்சர் ஜோசப் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்’ – வானதி சீனிவாசன் சொல்லும் க...
`இப்ப Zombie-னா எல்லாருக்கும் தெரியுது; ஆனா அப்போ...'- சுவாரசியம் பகிரும் மிருதன் சக்தி சௌந்தர்ராஜன்
ஸோம்பி கான்செப்ட், ஹாலிவுட்டில் நமுத்துப்போன ஃபார்முலா என்றாலும் தமிழ் ஆடியன்ஸுக்கு ஸோம்பிகள் கொஞ்சம் புதுசு. பிரபுதேவா - வடிவேல் கூட்டணியில் சில மாதங்களுக்கு முன் வெளியான 'பேங் பேங்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானது. வடிவேலுவும் ஹோம்பி ஜானருக்கு மாறியிருந்தார். இப்போது சந்தானத்தின் 'லவ் பைட்' படத்தின் முன்னோட்ட வீடியோவும் ஸோம்பி ஜானரை உறுதிப்படுத்தின. சந்தானத்தின் முந்தைய படங்களில் அவருக்கு பெரிதும் சக்சஸ் கொடுத்தது பேய்ப்பட டிரெண்ட் தான். ஆனாலும் ஒரு மாறுதலை விரும்பிய சந்தானம் அடுத்த அதிரடி ஹிட்டடிக்க ஸோம்பியை கையில் எடுத்துள்ளார்.

தமிழின் முதல் ஸோம்பி படமாக 'மிருதன்' வரவேற்பை அள்ளியது. கடந்த 2016-ல் வெளியான படம், இப்போதும் பேசப்படுகிறது. ரவிமோகன், லட்சுமிமேனன் நடிப்பில் வெளியான மிருதனை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்தார். அவரிடம் ஸோம்பி டிரெண்ட் குறித்து கேட்டோம்.
``பேய் பட டிரெண்ட் எப்படி அடிக்கடி கவனம் பெறுதோ, அப்படி ஸோம்பி படங்களும் வரவேற்பை அள்ள ஆரம்பிச்சிட்டது. 'மிருதன்' அப்போ நடிகர்கள் ஒவ்வொருத்தர் கிட்டேயும் கதை சொல்றதுக்கு முன்னர், 'ஸோம்பினா என்ன? என்ன பண்ணுவாங்க. ஹாலிவுட்ல இதற்கு முன் வெளியான ஸோம்பி படங்கள்..' இப்படி அந்த ஜானரை பத்தி அறிமுகப்படுத்தவே ஒரு மணி நேரம் எடுக்கும். அதன் பிறகே படத்தின் கதையை சொல்லுவோம்.

ஆனா, இப்ப அப்படியில்ல. இப்ப ஸோம்பினா எல்லாருக்கும் பரிட்சயமாகிடுச்சு. நேரடியாகவே படத்தின் கதையை சொல்ல ஆரம்பிச்சிடலாம். ஸோம்பிங்கற வார்த்தையே வெகு ஜனமக்களுக்கு தெரியாது. ஆனா, இப்ப அந்த ஜானர்ல வெளியான உலக சினிமாக்களையே பட்டியல் போட்டு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதிலும் ஓடிடி வந்த பிறகு ஸோம்பி ஜானரில் வெளியான அத்தனை படங்கள்ல கொரியா, ஈரான், ஹாலிவுட்னு தனித்தனியா பிரிச்சு மேய்ந்து பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.

இயக்குநர்களுமே அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரி புதுப்பிச்சு எடுத்துட்டு இருக்காங்க. சமீபத்த்தில் வெளியான 'பேங் பேங்', 'லவ் பைட்' படங்களின் டீஸர்களையும் பார்த்ததும் சந்தோஷமாகிடுச்சு. ஒவ்வொரு இயக்குநருமே ஒவ்வொரு ஜானரையுமே வித்தியாசமானதாக கையாளுவாங்க. ஸோம்பி கதையில் காமெடியும் சரிசமமாக கலந்து கட்டுறது சுவாரசியமாகவும் இருக்கு. அதிலும் 'லவ் பைட்'ஸ் ரொம்பப் பிடிச்சது.'' என்கிறார் சக்தி சௌந்தர்ராஜன்.
















