செய்திகள் :

’முதலமைச்சர் ஜோசப் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்’ – வானதி சீனிவாசன் சொல்லும் காரணம்!

post image

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் பெருமைமிகு தமிழ்நாட்டிற்கு பெரும் களங்கமாக அமைந்தது புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடந்த அவலம்.  பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில், அவர்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது, தமிழ்நாட்டையும் தாண்டி, ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரச் செய்தது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் சுமார் இரண்டு ஆண்டுகள் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களே, அவர்கள் குடிக்கும் குடிநீரில் மனித மலத்தை கலந்தார்கள் என்று தீர்ப்பு எழுதியது.

தங்களுக்கு நீதி கிடைக்க  வலியுறுத்தியும், தங்களது வலியை, வேதனையை உலகிற்கு உணர்த்தவும், வேங்கைவயல் மக்கள், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்தனர். ஆனால், மாற்றத்தை  ஏற்படுத்தி இருக்கிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் இதைப் பற்றி கவலைப்படவில்லை. முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். அவருக்கு உண்மையிலேயே பட்டியலின மக்கள் மீது அக்கறை இருக்குமானால், வேங்கைவயல் கிராமத்திற்கு நேரில் சென்று நீதிக்காக போராடிவரும் பட்டியலின மக்களைச் சந்திக்க வேண்டும். குடிநீரில் மனித மலம் கலக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று மேடைகளில் முழங்கினால் மட்டும் போதாது. அதை செயலில் காட்ட வேண்டும். முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக வேங்கைவயல் செல்லுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி பதவி பறிப்பு; அரசியல் களத்திற்கு மீண்டும் வரும் செ.ம.வேலுசாமி - பின்னணி என்ன?

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள செங்கத்துறை பகுதியை சேர்ந்தவர் செ.ம.வேலுசாமி. அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்களில் ஒருவரான இவர், அக்கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுக... மேலும் பார்க்க

‘தவெக-அதிமுக கூட்டணி சேர்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள்’ – போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராகவும், பி.ஜே.பி அரசின் மதவாதத்திற்கு எதிராகவும் வாக்களித்த... மேலும் பார்க்க

பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி குழுவினர்: எடப்பாடி அதிரடி - முழு விவரம்!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்திருந்தனர். இதில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரண்டாகப் பிரிந்து, 25 பேர் தவெக-விற்கு ஆ... மேலும் பார்க்க

'விஜய் ஸ்கெட்சை கணிக்க தவறிய எடப்பாடி பழனிசாமி.!' - அதிமுக மீண்டும் ஒருமுறை பிளவுப்பட்ட பின்னணி!

இரு கூறாக பிளவுப்பட்டு களத்தில் நிற்பது ஒன்றும் அதிமுகவுக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இறப்பை தொடர்ந்து பல முறை அதிமுக பிளவுப்பட்டு இரு கூறாக நின்றிருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் அதிமுகவின் இருப... மேலும் பார்க்க

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு - இரண்டே வாகனங்களுடன் பிரதமர் மோடி!

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

Vijay : `கொளத்தூர் வெற்றியின் வீச்சைப் பார்த்துமா புரியவில்லை?' - உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி

இன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனத்துக்கு தன் எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய் பதிலளித்திருக்கிறார். அதில், ``என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வ... மேலும் பார்க்க