செய்திகள் :

இரண்டாவதும் பெண் குழந்தை... பிறந்த அன்றே புதைக்கப்பட்ட கொடூரம் - தந்தை, தாத்தா உட்பட 3 பேர் கைது!

post image

ராமேஸ்வரம், சம்பை பகுதியைச் சேர்ந்த நாகபாண்டி (30) இவருக்கும், லோகநந்தினி (23) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், லோகநந்தினி மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18 -ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நாகபாண்டியின் வீட்டில் லோகநந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தினரே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை தொடர்ந்து லோகநந்தினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு லோகநந்தினிக்கு குழந்தை பிறந்திருப்பது தெரியவந்துள்ளது. லோகநந்தினியிடம் இது குறித்து மருத்துவர்கள் கேட்க, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தந்தை நாகபாண்டி
கிருஷ்ணன்

போலீஸார் நடத்திய விசாரணையில் வீட்டிலேயே குழந்தை பிறந்ததும் பின்னர் அந்த குழந்தையை வீட்டின் பின்புறத்தில் புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து நாகபாண்டியின் வீட்டிற்கு சென்ற நகர் காவல் நிலைய போலீஸார் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை வளர்ப்பது சிரமம் எனக் கூறி, இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை நாகபாண்டி, அவரது தந்தை கிருஷ்ணன் (66) மற்றும் சகோதரி முனீஸ்வரி (36) ஆகியோர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை இறந்து பிறந்ததா அல்லது உயிருடன் புதைக்கப்பட்டதா என்பது குறித்து முழுமையாக தெரியவரும். இந்நிலையில் குழந்தையின் இறப்பினை மறைத்து அதனை வீட்டில் புதைத்தது தொடர்பாக குழந்ந்தையின் தந்தை நாகபாண்டி, அவரது தந்தை கிருஷ்ணன், சகோதரி முனீஸ்வரி ஆகிய மூவரையும் ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். பிறந்த அன்றே பச்சிளம் குழந்தை உயிரிழந்த கொடூர சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்: காணாமல் போன 3 வயது சிறுமி - 5 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!

அரியலூர் மாவட்டம், புங்கங்குழி ஊராட்சிக்குட்பட்ட சிலுப்பனுர் கிராமத்தில் வசிப்பவர்கள் மணிமாறன்-சரிதா தம்பதி. இவர்களது மூன்று வயது பெண் குழந்தை நிவிஷ்னா. நேற்று தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ம... மேலும் பார்க்க

`கொலையான ஆசிரியை குடும்பத்திற்கு இழப்பீடு என்னாச்சு?'- எஸ்.பிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றியவர் ரமணி. இவரை காதலித்து வந்த மதன்குமார் என்பவர் ரமணி திருமணத்திற்கு மறுத்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு நவ.20ம்... மேலும் பார்க்க

மதுரை: சிகிச்சைக்கு சென்ற பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர்?- கைதுசெய்ய கோரி போராட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது கணவர் சென்னையில் காவல்துறையில் பணிபுரிந்துவருகிறார்.இந்நிலையில் தன் குழந்தைக்கு சளி என்பதால் தனது குடும்ப மருத்துவரான விருது... மேலும் பார்க்க

சென்னை: மறுமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஜினீயர் - சிக்கியது எப்படி?

மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அவர் கணவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அவர் படித்துக் கொண்டே வேலை செ... மேலும் பார்க்க

ஆரணி: செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்புடையவர் படுகொலை - மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொடூரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஆவியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் `கட்டை’ குணா என்கிற குணசேகரன். இவர் மீது வனத்துறையில் செம்மரக்கட்டை கடத்தல் போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூற... மேலும் பார்க்க

கரூர்: 5 பேர் தற்கொலை விவகாரம்... விவாகரத்து பிரச்னை - அதிர்ச்சி சம்பவத்தின் உருக்கமான பின்னணி

கரூர் நகர் பகுதியை ஒட்டியுள்ள வாங்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் கண்ணன். இவரது தந்தை ராமசாமி (63), தாய் ஜானகி (60), சகோதரி சுகுணா ( 35). இவருக்கு வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்ப... மேலும் பார்க்க