செய்திகள் :

`இரண்டாவது குழந்தைக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை' - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடித் திட்டம்

post image

தென்னிந்திய மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் தொகை குறைந்துவருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவ்வப்போது பேசிவருகின்றனர். மேலும், மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி தொகுதி பிரிக்க வேண்டும் என்ற பா.ஜ.க அரசின் திட்டத்தால் தென்னிந்திய எம்.பி-களின் எண்ணிக்கை குறையும் என்ற சூழல் நிலவுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை ஈடுகட்ட, இரண்டாவது குழந்தை பெறும் தம்பதிகளுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர அரசு பரிசீலித்து வருவதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ``மாநிலத்தின் மக்கள் தொகை சமநிலையை இழந்துவருவது கவலையளிக்கிறது. ஆந்திராவின் தற்போதைய மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1.5 ஆக உள்ளது. இது மக்கள் தொகை மாற்றத்திற்குத் தேவையான சராசரி அளவான 2.1-ஐ விடக் குறைவு. அதை உயர்த்த வேண்டும் என்ற முடிவை இந்த அரசு ஆலோசித்து வருகிறது. அதன் அடிப்படையில், நாங்கள் ஒரு புதிய முறையை ஆய்வு செய்து வருகிறோம்.

இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் பெற்றோருக்குப் பிரசவத்தின்போது ரூ. 25,000 ஊக்கத்தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இது மக்களிடையே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். பல நாடுகள் தற்போது இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து, முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாகப் பொருளாதாரச் சவால்களைச் சந்திக்கின்றன. ஆந்திராவிலும் எதிர்காலத்தில் இத்தகைய சூழல் ஏற்படாமல் தடுக்க இப்போதே நடவடிக்கை எடுப்பது அவசியம். மார்ச் மாத இறுதிக்குள் 'மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை' வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்படும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஓபிஎஸ்: `ஆதரவாளர்கள் கொடுத்த ட்விஸ்ட்!' - தேனியை விட்டுவிட்டு மதுரையில் இணைப்பு விழா! பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதிமுகவின் விசுவாசி, ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவர், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இரு... மேலும் பார்க்க

`அடுத்து கியூபாதான்' - ஈரான் போரை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என கூறும் டொனால்டு ட்ரம்ப்

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில் 5 வாரங்க... மேலும் பார்க்க

அதிமுக-விலிருந்து மேலும் ஒரு புது கட்சி! - பெங்களூரு புகழேந்தியின் புரட்சி அதிமுகவின் நோக்கம் என்ன?

பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலாவைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து மேலும் ஒரு புதிய கட்சியை தொடங்கியுள்ளார் வழக்கறிஞர் வா.புகழேந்தி.புரட்சி அதிமுகதிமுக-விலிருந்து பிரிந்து எம்ஜிஆர், அதிமுகவைத் தொடங்கி ஆட்... மேலும் பார்க்க