செய்திகள் :

`அடுத்து கியூபாதான்' - ஈரான் போரை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என கூறும் டொனால்டு ட்ரம்ப்

post image

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆரம்பத்தில் 5 வாரங்கள் வரை போர் தொடரலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்காவிடம் இருக்கும் ஆயுதங்களின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.

போர் எப்போது முடியும் என்பது குறித்து டொனால்டு ட்ரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. ஈரானை முடிக்க வேண்டும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. இது தவிர ஈரானை வழிநடத்துவதற்கு பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்" என்று கூறினார்.

தாக்குதலுக்குள்ளான அமெரிக்க ரேடார்

ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவது குறித்தும் அமெரிக்கா பயப்படுகிறதா என நிருபர்கள் கேட்டதற்கு, "அவர்கள் எப்போதும் அதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எப்போதும் அதைப் பற்றி சிந்திக்கிறோம். நாங்கள் அதற்காகத் திட்டமிடுகிறோம். ஆனால் நாங்கள் சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். நான் சொன்னது போல், சிலர் இறந்துவிடுவார்கள். போருக்குச் செல்லும்போது, ​​சிலர் இறக்கத்தான் செய்வார்கள். தாக்குதல்களுக்கு மத்தியில் டெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து அமெரிக்காவை அணுகுகிறது.

ஆனால் அவர்கள் கோரிக்கை தாமதமாக வந்தது. அமெரிக்கா இப்போது அவர்கள் செய்வதை விட அதிகமாக போராட விரும்புகிறது. அமெரிக்க ராணுவம், இஸ்ரேல் படையுடன் இணைந்து ஈரானின் ஏவுகனை மற்றும் ட்ரோன்களை அழிக்க எந்நேரமும் பணியாற்றி வருகிறது. முதலில் ஈரானை முடிக்க விரும்புகிறோம். அதனை முடித்துவிட்டு கியூபா மீது கவனம் செலுத்தப்போவதாக" அவர் தெரிவித்தார்.

கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடை காரணமாக அந்நாட்டிற்குள் எரிபொருள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மேற்கு ஆசியாவில், குறிப்பாக ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அமெரிக்கா வழங்கிய ஏவுகணை பாதுகாப்பு நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட ரேடார் அமைப்புகள், ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ரேடார்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்டறிவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இது பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக-வுக்கு நாகூர் ஹனீபா; எம்.ஜி.ஆருக்கு? - அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்! | சுவடுகள் 8

அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்!நினைவுச் சுவடுகள் 08தேர்தல்கள் என்றாலே சத்தமும் இரைச்சலும்தான். தேர்தலை ஒரு திருவிழாவாக பார்க்கும் தமிழ்நாட்டில், தேர்தல் என்பது ஆட்டமும் பாட்டமும் நிறைந்ததாக... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் விவகாரம்: `இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்காவின் மிரட்டல் தொடரும்?' - காங்கிரஸ் கேள்வி

அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ர... மேலும் பார்க்க

ஓபிஎஸ்: `ஆதரவாளர்கள் கொடுத்த ட்விஸ்ட்!' - தேனியை விட்டுவிட்டு மதுரையில் இணைப்பு விழா! பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதிமுகவின் விசுவாசி, ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவர், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இரு... மேலும் பார்க்க

அதிமுக-விலிருந்து மேலும் ஒரு புது கட்சி! - பெங்களூரு புகழேந்தியின் புரட்சி அதிமுகவின் நோக்கம் என்ன?

பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலாவைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து மேலும் ஒரு புதிய கட்சியை தொடங்கியுள்ளார் வழக்கறிஞர் வா.புகழேந்தி.புரட்சி அதிமுகதிமுக-விலிருந்து பிரிந்து எம்ஜிஆர், அதிமுகவைத் தொடங்கி ஆட்... மேலும் பார்க்க