செய்திகள் :

`கொடநாடு வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?'- சி.பி.சி.ஐ.டி‌-யிடம் கேள்வியெழுப்பிய நீதிமன்றம்!

post image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23- ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பான வழக்கு விசாரணை,

கொடநாடு

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், ``இந்த வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?" என சி.பி.சி.ஐ.டி தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சி‌.பி.சி.ஐ.டி தரப்பு அதிகாரிகள், ``இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி தரப்புக்கு மாற்றப்பட்டதில் இருந்து தற்போது வரை 269 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அந்த தகவல்கள் வாக்குமூலங்களாகப் பெறப்பட்டுள்ளன.

கொடநாடு

மேலும், சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சந்தேகப்படும்படியான நபர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்த தரவுகள் தேவைப்படுகின்றன. குஜராத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்தில் இருந்து ஒலி நாடாக்கள் தொடர்பான ஆய்வு முடிவுகள் வர வேண்டியுள்ளன. அவை கிடைக்கப்பெற்றதும் வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு நகரும்" எனத் தெரிவித்துள்ளனர்.

சென்னை: டி.பி.யில் துணை முதல்வர் படம்! கிளாம்பாக்கம் பஸ் நிலைய கடைகளை காண்பித்து லட்சங்களில் மோசடி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், சென்னை வடக்கு இணை கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் பைஃனான்ஸ் தொழில் செய்து வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தத் தொழ... மேலும் பார்க்க

கோவை: கை, கால்கள் கட்டிப் போட்டு மூதாட்டி கொலை... நகைகள் திருட்டு; நேபாள பணிப்பெண்ணுக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம், திருச்சி சாலை நஞ்சுண்டாபுரம் பகுதியில் பார்சன் குடியிருப்பு உள்ளது. அங்கு கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ராம்குமார் குட்டி என்கிற ஆயுர்வேத மருத்துவர், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ... மேலும் பார்க்க

தருமபுரி: பெற்ற குழந்தையை குப்பையில் வீசிய கல்லூரி மாணவி; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் சிசுவை குப்பையில் வீசிச்சென்ற கல்லூரி மாணவியின் செயல், தருமபுரியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த மாணவி மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகி... மேலும் பார்க்க

`மானாமதுரை சம்பவம் சாதிய மோதலா?' - விளக்கமளித்த சிவகங்கை எஸ்.பி!

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நடந்த கொடூரத்தின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள், அதே பாணியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியிர... மேலும் பார்க்க

Holi: பாட்டி மீது கலர் தண்ணீரை அடித்த பேரன்; கோபமான பாட்டியால் விபரீதத்தில் முடிந்த ஹோலி விளையாட்டு

ஹோலி பண்டிகையின்போது ஒருவர் மீது ஒருவர் கலர் பொடியைத் தூவுவது வழக்கம். அவ்வாறு கலர் பொடியைத் தூவுவது சில நேரங்களில் சண்டையில் முடிந்துவிடும். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள கொராடி என்ற இடத்... மேலும் பார்க்க

சேலம்: "தாழ்த்தப்பட்ட உன்னைத் திருமணம் செய்ய முடியாது" - காதலனின் சாதி ஆணவத்தால் மாணவி தற்கொலை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த சக்திவேலின் மகன் கார்த்திகேயன். மாற்று சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன், சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் பயின்ற... மேலும் பார்க்க