செய்திகள் :

ஈரான் போர்; வெள்ளை மாளிகையில் சிறப்பு பிரார்த்தனை செய்த அதிபர் ட்ரம்ப் - புகைப்படங்கள் வைரல்!

post image

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் வேகமாக காலியாகி வருகிறது. எனவே வரும் நாள்களில் அமெரிக்காவிற்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போரை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் அமெரிக்கா திண்டாடிக் கொண்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் இஸ்ரேல் தங்களை இடியாப்ப சிக்கலில் மாட்டிவிட்டுவிட்டதாக அமெரிக்கா நினைக்கிறது.

``இந்தப் போரில் எப்படியாவது எங்களுக்கு வெற்றியைக் கொடுங்கள்" என்று கடவுளிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துவிட்டார். அதோடு விடாமல் அமெரிக்க அதிபரின் மாளிகையான வெள்ளை மாளிகையில் இதற்காக பிரார்த்தனைக் கூட்டத்திற்கு டொனால்டு ட்ரம்ப் ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து முக்கிய கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து வெள்ளை மாளிகையில் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் பிரார்த்தனை செய்தனர்.

இதில் அமெரிக்காவிற்கு எப்படியும் ஈரான் போரில் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றும், போர்க்களத்தில் இருக்கும் தங்கள் வீரர்களைப் பாதுகாக்கவேண்டும் என்றும், நாட்டை வழிநடத்த அதிபர் ட்ரம்பிற்கு வலிமையைக் கொடுக்கவேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது. டொனால்டு ட்ரம்ப் இதற்காக கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்த காட்சி, சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. ஈரான் தலைமையை மாற்றி விடுவேன் என்று கொக்கரித்து போரை தொடங்கிய டொனால்டு ட்ரம்ப், இப்போது போர் வெற்றிக்குக் கடவுள் துணையை நாடி இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வெள்ளை மாளிகையில் நடந்த பிரார்த்தனை வீடியோவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் உதவியாளரே சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2021ம் ஆண்டு ஆப்கன் போருக்குப் பிறகு அமெரிக்கா நேரடியாக எந்த போரிலும் ஈடுபட்டது கிடையாது. இப்போதுதான் ஈரான் போரில் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளது. தற்போது நடந்து வரும் போருக்கு அமெரிக்க மக்களில் 50 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தவிர மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு முஸ்லிம் நாடுகளும் ஈரான் மீதான போருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இரண்டு நாடுகள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

'வாட்ஸ்அப் உரையாடலை மட்டும் வைத்து விவாகரத்து வழங்க முடியாது' - மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

வாட்ஸ்அப் உரையாடல்களை மட்டுமே ஆதாரமாக வைத்து ஒருவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் குடும்ப நீதிமன்றம், மனைவி தரப்பு ... மேலும் பார்க்க

பகுவா பாடல்கள் படி மாணவர்களுடன் ஹோலி கொண்டாடிய ஆளுநர் ரவி | Video

பாடல்கள் படி ஆளுநர் ஆர். என் ரவி ஹோலி பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார். இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைவர்கள் பலரும் மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்து வ... மேலும் பார்க்க

மும்பை: வளைகுடா நாடுகளுக்குச் செல்ல முடியாமல் துறைமுகத்தில் அழுகும் காய்கறி, பழங்கள்!

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஈரானில் ... மேலும் பார்க்க

Harish Kalyan: `மகள் பிறந்திருக்கிறாள்' - தந்தையான நெகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்!

தமிழ் சினிமாவுக்கு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதைத் தொடர்ந்து, அவர் நடித்த பியார் பிரேமா காதல், பார்க்கிங், லப்பர் பந்து, டீசல் போன்றப் படங்கள் மூலம் தமிழ் ச... மேலும் பார்க்க

`பிழைப்பு தேடிவந்தோம்; பதுங்கு குழிகளை தேடிக்கொண்டிருக்கிறோம்' - வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள்

ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் வளைகுடா நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்து வரும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தனியாளாக நின்று தொடர்ந்து தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க