செய்திகள் :

திருச்சி: நாதஸ்வர மேதை ஷேக் மெகபூப் சுபானி மறைவு - சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்

post image

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நாதஸ்வர மேதை ஷேக் மெகபூப் சுபானி, தனது குடும்பத்தின் 8-வது தலைமுறை நாதஸ்வரக் கலைஞராக பரிமளித்து வந்தார். தனது தந்தை ஷேக் மீரா சாகிப்பிடம் இசை பயின்றவர். பின்னர், உலகப்புகழ் பெற்ற டாக்டர் ஷேக் சின்னா மௌலானா சாகிப்பிடம் 15 ஆண்டுகள் தஞ்சாவூர் பாணியிலான கடினமான இசைப் பயிற்சியைப் பெற்று, தமிழக மண்ணின் கலை மரபை உள்வாங்கிக் கொண்டார்.

தொடர்ந்து பல மேடைகளில் தனது நாதஸ்வர கச்சேரியை அரங்கேற்றி, இசையுலகில் பரிமளித்து வந்தார். மெகபூப் சுபானி அவர்களின் வாழ்வில் பல விருதுகள் கிடைத்தாலும், தமிழக மண்ணின் மீது அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது.

dead

இது குறித்து, அவரது மகன் பெரோஸ் பாபு கூறும்போது..

"எனது தந்தை தமிழக முதல்வர் கையில் நேரடியாக ஒரு விருதைப் பெற வேண்டும் என்பது நீண்ட கால ஆசையாக இருந்தது. அந்த ஆசை கடந்த 2022-ம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கைகளால் விருது பெற்றபோது நிறைவேறியது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 56 ஆண்டுகளாக இசைப்பணியாற்றி வரும் இந்த தம்பதியினரின் கலைப் பயணத்தைப் பாராட்டி பல்வேறு அரசு அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 'கலைமாமணி' விருது. இந்திய அரசின் உயரிய 'பத்மஸ்ரீ' விருது. ஆந்திர அரசின் 'YSR வாழ்நாள் சாதனையாளர் விருது. மஹாராஜபுரம் சந்தானம் நினைவு விருது', விகடன் வழங்கிய விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளனர். அதேபோல், கடந்த 2005-ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பைப் பெற்றனர்.

with abj abdul kalam

அப்போது, கலாம் அவர்கள் வழங்கிய அறிவுரைப்படி, மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்காகத் தொடர்ந்து பல இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்தி, இசையைச் சேவையாகவும் மாற்றிக் காட்டினர். கனடா, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா என உலக நாடுகளைத் தனது நாதஸ்வர இசையால் கட்டிப்போட்ட ஒரு மகா கலைஞனின் மறைவு, இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

மனதின் 'ஹாஃப் மூன்'... மாற்றத்தின் ஃபுல் மூன்! - இளம் எழுத்தாளர் இனியாவின் நெகிழ்ச்சிப் பயணம்

"பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை.. கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள 'ஆனந்தா'வில் அந்தி மாலைப் பொழுதில் நிலவிய ஒரு நெகிழ்ச்சியான இலக்கியச் சங்கம். 'டாக்டர் நெட் இந்தியா' (DoctorNet India) நிறுவனர்கள் மற்று... மேலும் பார்க்க

பொருநை புத்தகத் திருவிழா: மாற்றுத்திறன் மாணவர்களின் கைவினைப் பொருள்கள், ஓவியங்கள் கண்காட்சி! - Album

நெல்லை பொருநை புத்தகத் திருவிழா: மாற்றுத்திறன் மாணவர்களின் கலை,கைவினை பொருட்கள் கண்காட்சி,ஓவியங்கள்! மேலும் பார்க்க

கோவை: ஃபேஸ் பெயின்ட், புகைப்படக் காட்சி டு தெருக்கூத்து- பி.எஸ்.ஜி கல்லூரியில் `கலகல' கலைத் திருவிழா

கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான `சிந்தனை மன்றம்', தனது 11-வது கலைத் திருவிழாவை சிறப்பாக நடத்தியது. கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரம்மம்... மேலும் பார்க்க

`சிகை கொற்றன் வர கண்ட' - எகிப்து பிரமிடுகளில் தமிழ் கல்வெட்டுகள்; 2,000 ஆண்டுக்கால ஆச்சர்யம்!

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று நாம் வைத்திருப்பது போன்ற நவீன திசைகாட்டிகளோ அல்லது ஜிபிஎஸ் வசதிகளோ இல்லாத காலத்தில், பாய்மரக் கப்பல்களில் காற்றையே துணையாகக் கொண்டு கடல் கடந்தவர்கள் நம் முன்னோர... மேலும் பார்க்க

"எந்த சாதி என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது" - சாதி சர்ச்சை குறித்து பட்டிமன்றம் ராஜா

பட்டிமன்ற மேடைப் பேச்சின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக்கியவர் பட்டிமன்றம் ராஜா. பட்டிமன்றத்தைத் தாண்டி சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: 'தொண்டைமான் சிலையும், அவர் அமைத்த கோயிலும்!' - தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் தமிழ்த்துறைத் தலைவர் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் கா.காளிதாஸ், பேராசிரியர் சாலை கலையரசன், பேராசிரியர் கருப்... மேலும் பார்க்க