செய்திகள் :

புதுக்கோட்டை: 'தொண்டைமான் சிலையும், அவர் அமைத்த கோயிலும்!' - தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் தமிழ்த்துறைத் தலைவர் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் கா.காளிதாஸ், பேராசிரியர் சாலை கலையரசன், பேராசிரியர் கருப்பையா ஆகியோர் கொண்ட வரலாற்று ஆய்வுக் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் செல்லும் வழியில் உள்ள நெடுஞ்சேரியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் இடிந்த நிலையில் அனுமன் கோயில் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இது பற்றி ஆய்வாளர்கள் பேசும்போது,

"இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிலைகளில் ஒன்று, தொண்டைமான் மன்னர் சிலை. மன்னர் தலையில் தொப்பியுடன் காணப்படுகின்றார்.

கண்டெடுக்கப்பட்ட சிலை

மன்னரைச் சுற்றிலும் கோயிலுக்கு விளக்கத்தம்பம் அளித்த குறுநிலக்கிழார்களின் உருவங்கள் உள்ளன. அதேபோல், ஆலயத்தில் கிடைத்த ஒரே ஒரு சிலை கையில் சஞ்சீவி மலை தாங்கிய அனுமன் சிலையாகும். அதுவும், தொண்டைமான்களுடைய குலதெய்வச்சிலை மற்றும் புதுக்கோட்டை அரசு இலட்சினைச் சின்னம். சிலையில் இருக்கும் மன்னர் யார் என்ற ஆய்வுக்கு வருகிறபோது, புதுக்கோட்டை பகுதியில் சங்கம வம்ச மன்னர்களின் பிரதிநிதிகள் பலரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஹரிஹர புக்கர் ஆகியோரின் சகோதரர் கம்பனனின் பெயரிட்ட கி.பி 1374-ம் ஆண்டு கல்வெட்டு குடுமியாமலையில் காணப்படுகிறது. கிபி 13 34 -35 மதுரை சுல்தானியர் ஆட்சியில் மாபார் ( மாத்தூர்) பகுதியை ஜலாலுதீன் அசன்சா ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

கிபி 14 99 இல் புதுக்கோட்டை பகுதியை நரசப்ப நாயக்கர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்தத் தொப்பி அணிந்த மன்னர் சிலை இவர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கிபி 1641 - 1730 -இல் இவர்களை வெற்றி கண்டு இரகுநாதராய தொண்டமான் ஆட்சிக்கு வருகிறார். இவரது சிலை புதுக்கோட்டை பிரகதாம்பாள் ஆலயத்தில் உள்ளது. அதில் குடுமியும், நெடுஞ்சேரியில் கண்டெடுக்கப்பட்ட சிலையில் தொப்பியுடனும் காணப்படுகிறார். பொம்மாடி மலை என்ற காரணப்பெயர். சங்கம ஆட்சிக்கு பின் விஜயநகர பேரரசின் ஆட்சிக்கு வந்தவர்கள் சாலுவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.

silai

சாலுவ முதலாம் நரசிம்மன் (கி.பி 1486 - 1497) மகன் இம்மாடி நரசிம்மன் காலத்து கல்வெட்டுகள் இரண்டு இங்கு காணப்படுகின்றன. நெடுஞ்சேரிக்கு அருகில் உள்ள தற்போதைய பொம்மாடி மலை இம்மாடி நரசிம்மன் காலத்தில் இம்மாடி மலை என்றாகித் தற்போது பொம்மாடி மலை என்றாகி இருக்கக்கூடும். இன்றைய மேட்டுப்பட்டி கேட் முனிக் கோயிலுக்கு அருகில் சாலுவன் குடியிருப்பு என்று ஒரு குடியிருப்பு (தெரு) உள்ளதையும் சான்றாக்கிக் கொள்ளலாம். இம்மாதிரியான தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை" என்றார்கள்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘ஃபேஷன் திருவிழா’… நிப்ட் கண்காட்சி

சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தின் (National Institute of Fashion Technology – NIFT) சார்பில் பிரமாண்டமான ஃபேஷன் எக்ஸிபிஷன் நடைப்பெற்றது. இவர்களோடு தஸ்த... மேலும் பார்க்க

'அடக்குமுறைக்கு எதிரான குரல் தான் எங்கள் இசை; எங்கள் இசை தான் அரசியல்!' - `தம்மா த பேண்ட்' குழுவினர்

‘கலை என்பது சடங்குகளிலிருந்து விடுபட்டு அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாக மாறுகிறது’ - பெஞ்சமின் இவ்வாறு தங்களுடைய கலையை சமூக அரசியலுக்கும் கொண்டாட்டத்திற்குமான கருவியாய் முன்னெடுத்து, சமீபகாலமாக அட்... மேலும் பார்க்க

சிற்பக்கலையில் 50 ஆண்டுக்கால அர்ப்பணிப்பு; பத்ம ஶ்ரீ விருது பெறும் ராஜா ஸ்தபதி!

தமிழ்ச்சிற்பக்கலைத் துறையில் கடந்த 51 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வரும் சிற்பக்கலைஞர் ராஜா ஸ்தபதிக்கு, மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அறிவித்திருக்கிறது. இளம் தலைமுறையினரின் பெரும் நம்பிக்கையாய் திகழும் ... மேலும் பார்க்க

பத்ம ஸ்ரீ: "கிட்னா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்" - மறைந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணனின் மனைவி

3000 ஆண்டுகள் பழமையான முறைப்படி...பத்ம ஶ்ரீ2026க்கான பத்ம ஶ்ரீ விருது நீலகிரி மாவட்டம் ஆலு குரும்பர் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த குரும்பா ஓவியக் கலைஞரான ஆர்.கிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.3000 ஆண்... மேலும் பார்க்க

453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு; ஆங்கிலேயர் கால பீரங்கி குண்டுகள்! - தொல்லியல் மாணவர்கள் கண்டெடுப்பு

நெல்லை மாவட்டம், சுற்று வட்டாரப் பகுதிகளில் மன்னர் காலத்து பல்வேறு கல்வெட்டுகள், ஆய்வில் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறையின் இரண்டாம் ஆண... மேலும் பார்க்க