செய்திகள் :

`கமல் பேசிய எதுவுமே புரியவில்லை; அதனால்தான் கோவை மக்கள் திருப்பி அனுப்பினார்கள்'- வானதி சீனிவாசன்

post image

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் திராவிட மாடல் தோல்வி அடைந்துள்ளது. போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திருச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

வானதி சீனிவாசன்

இந்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் மரணங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை சீரழித்து வருகிறது.

மக்களுக்கான நலத்திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது. முதலமைச்சர் மீண்டும் ஆட்சி அமைத்துவிடலாம் என்று கனவு கண்டு வருகிறார். ஆனால் அது நடக்காது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது தான் எங்களுடைய கனவு. நான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூட்டணி கட்சிகள் அனைவரும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். எங்கள் கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று பணியாற்றி வருகிறோம்.

அண்ணாமலை தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பொறுப்பை மாற்றி கொடுக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தார். ஊடகங்கள் அதை பூதாகரம் ஆக்கிவிட்டீர்கள். அண்ணாமலை எங்களுடன் சட்டமன்றத்தில் பங்கு பெற வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிய எதுவும் எனக்கு புரியவில்லை. ஏற்கெனவே கோவை மக்களுக்கு அவருடைய பேச்சு புரியவில்லை என்பதற்காக கடந்த 2021 தேர்தலில் அவரை திருப்பி அனுப்பினார்கள்" என்றார்.

`மோடியைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!' - ஓம் பிர்லா

இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறுத்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்... மேலும் பார்க்க

'வெறும் கைகளால் தொடக் கூடாது'; சென்னையில் பரவும் பறவைக் காய்ச்சல் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த பறவைகள் மற்றும் கால்நடைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வெள... மேலும் பார்க்க

'நான் சரண்டர் ஆவதா' கொதிக்கும் ராமதாஸ் டு திமுக-வுக்குத் தாவும் அதிமுக மாஜி மாண்புமிகு! | கழுகார்

கொதிக்கும் ராமதாஸ்!'நான் சரண்டர் ஆவதா...'தேர்தல் நெருங்க நெருங்க, 'என்ன செய்யப் போகிறோம்?' என்ற கேள்வி ராமதாஸ் தரப்பினருக்கு ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வி.சி.க-வின் தலையீட்டால், ராமதாஸுக்கு எந்த பத... மேலும் பார்க்க

சென்னை: 'அரசுக்கு நன்றி; ஆனால் போராட்டம் தொடரும்!' - தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு

சென்னையில் தனியார்மயத்தை எதிர்த்து 150 நாள்களுக்கு மேலாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்களாகவே சேர்த்திருக்கிறது சென்னை மாநகராட்சி.கு.பாரதிஇது சம்பந்தமாக தூய்... மேலும் பார்க்க

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? - அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் துணைமு... மேலும் பார்க்க

'எங்க வீட்டுக்கு வாங்க' என்றழைத்த மோடி; கலைஞரின் எமோஷனல் பதில் - நினைவுக்கூர்ந்த ஜெகத்ரட்சகன்

திருவள்ளூரில் நேற்று (பிப்.5) திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி, கலைஞர் கருணாநிதி சந்திப்பின்போது நடந்த விஷயத்தை நினைவுக்கூர்ந்திருக்கிறார்.மேடையில் பேச... மேலும் பார்க்க