`மோடியைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!' - ...
பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியிடத்தை சாணி போட்டு சுத்தம் செய்த ஓட்டுநர் - தேசிய ஆணையம் நோட்டீஸ்!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக் கழகம் கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் சசிராஜ். இவர் திமுக தொழிற்சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார். மேட்டுப்பாளையம் பணிமனையில் 43 நபர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

சசிராஜ் ஆளும் கட்சி மற்றும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சசிராஜின் கட்டுப்பாட்டில்தான் கிளை இயங்கி வருகிறது. பணியிலும் இவர் சாதிய ஆதிக்கத்துடன் நடந்து கொள்வதாக புகார் எழுந்து வருகிறது.
அவர் சார்ந்துள்ள சமூகத்தினருக்கு அருகில் பணி ஒதுக்கும் அவர், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தூரமாக பணி ஒதுக்கி வஞ்சிப்பதாகவும், புகார்கள் வாசிக்கப்படுகிறது. கிளை மேலாளர் பிரகாஷ்குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரிடம் மரியாதைக் குறைவாக பேசி, சசிராஜ் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பிரகாஷ் உள்ளிட்ட சிலர் பணியிட மாறுதலாகியுள்ளனர். புதிதாக பணிக்கு வருபவர்கள் சசிராஜின் சமூகத்தைச் சேர்ந்தவர்களாம். அதனால் அந்த அலுவலகத்தை சாணிபோட்டு சுத்தம் செய்ய வைத்துள்ளார். இந்த வன்கொடுமை செயல் காரணமாக சசிராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சசிராஜை 15 நாள்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டல சட்டப்பிரிவின் உதவி மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சசிராஜ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 5 நாள்களுக்குள் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












