செய்திகள் :

சென்னை: 'அரசுக்கு நன்றி; ஆனால் போராட்டம் தொடரும்!' - தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு

post image

சென்னையில் தனியார்மயத்தை எதிர்த்து 150 நாள்களுக்கு மேலாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்களாகவே சேர்த்திருக்கிறது சென்னை மாநகராட்சி.

கு.பாரதி
கு.பாரதி

இது சம்பந்தமாக தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை முன்னெடுத்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

கு.பாரதி பேசியதாவது, 'தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்ட எந்த இடத்திலுமே அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்பட்டதில்லை. அதை இங்கே போராட்டத்தின் மூலம் சாதித்திருக்கிறோம். எங்கள் தொழிலாளர்கள் நான்கைந்து மாதங்களாக போராடியிருக்கிறார்கள்.

கு.பாரதி
கு.பாரதி

தங்களின் பணி மறுக்கப்பட்டதால்தான் அவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். ஆக, போராடிய ஐந்து மாதங்களுக்குமான ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். போராடிய சமயத்தில் தூய்மைப் பணியாளர்கள் மீதும் வழக்கறிஞர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 761 ரூபாய் ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும். அரசு எங்களுக்காக செய்திருக்கும் விஷயங்களுக்கு நன்றி. ஆனால், பணி நிரந்தரம் வேண்டிய எங்களின் போராட்டம் தொடரும்.

கு.பாரதி
கு.பாரதி

பிப்ரவரி 12 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடவிருக்கிறோம். நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை. தவெக உட்பட எல்லாருமே எங்களுக்கு பொதுவானவர்கள். கட்சிகளின் தேர்தல் அறிக்கைக் குழுக்களை சந்தித்து எங்களின் கோரிக்கைகளை தெரியப்படுத்துவோம். தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை எனில் சேப்பாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவோம்' என்றார்.

`மோடியைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!' - ஓம் பிர்லா

இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறுத்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், காங்... மேலும் பார்க்க

'வெறும் கைகளால் தொடக் கூடாது'; சென்னையில் பரவும் பறவைக் காய்ச்சல் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த பறவைகள் மற்றும் கால்நடைகளை வெறும் கைகளால் தொடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வெள... மேலும் பார்க்க

'நான் சரண்டர் ஆவதா' கொதிக்கும் ராமதாஸ் டு திமுக-வுக்குத் தாவும் அதிமுக மாஜி மாண்புமிகு! | கழுகார்

கொதிக்கும் ராமதாஸ்!'நான் சரண்டர் ஆவதா...'தேர்தல் நெருங்க நெருங்க, 'என்ன செய்யப் போகிறோம்?' என்ற கேள்வி ராமதாஸ் தரப்பினருக்கு ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வி.சி.க-வின் தலையீட்டால், ராமதாஸுக்கு எந்த பத... மேலும் பார்க்க

`கமல் பேசிய எதுவுமே புரியவில்லை; அதனால்தான் கோவை மக்கள் திருப்பி அனுப்பினார்கள்'- வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் திராவிட மாடல் தோல்வி அடைந்துள்ளது. போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. மக்கள... மேலும் பார்க்க

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? - அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் துணைமு... மேலும் பார்க்க

'எங்க வீட்டுக்கு வாங்க' என்றழைத்த மோடி; கலைஞரின் எமோஷனல் பதில் - நினைவுக்கூர்ந்த ஜெகத்ரட்சகன்

திருவள்ளூரில் நேற்று (பிப்.5) திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி, கலைஞர் கருணாநிதி சந்திப்பின்போது நடந்த விஷயத்தை நினைவுக்கூர்ந்திருக்கிறார்.மேடையில் பேச... மேலும் பார்க்க