இரு சக்கர வாகனத்துக்கு ரூ.1.61 லட்சம் அபராதம்! கதையல்ல நிஜம்!!
பெங்களூருவில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை கொலைக் குற்றவாளி போல காவல்துறையினர் தேடிக் கண்டுபிடித்து அவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
காரணம் வேறு ஒன்றுமில்லை.. அந்த வாகனத்தின் மீது பல முறை சாலைப் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தொடர்ந்து போக்குவரத்துக் காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்ட தொகை மட்டும் ரூ.1.61 லட்சம் என்கிறது தரவுகள்.
இவ்வாறு, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த வாகனத்தில் பயணித்தவர்கள் சாலை விதிகளை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பது மட்டும் 311 முறை என்கிறது தகவல்கள்.