State Awards: "எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக இதை முன்வைக்கவில்லை" - 'கை...
"இறுதிக்கட்ட சவால்களைச் சமாளித்து வருகிறோம்" - 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி குறித்து கெளதம் மேனன்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'மின்னலே' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
கௌதம் மேனனுக்கும் இது சினிமாவில் 25வது ஆண்டு. அதையொட்டி அவர் 'தி இந்து' ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவருடைய கரியரின் பல முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசியவர், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்தும் பேசியிருக்கிறார்.
நிதி சிக்கல்கள் போன்றவற்றால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் நீண்ட நாள்களாகத் தாமதமாகி வருகிறது.
அது குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், "'துருவ நட்சத்திரம்' படத்தைத் தொடங்கி, அப்படத்தை விக்ரமை வைத்து எடுத்து முடித்தேன்.
தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசுக்கப்படும் திரைப்படமாகவும் இது இருந்து வருகிறது.
நிதிச் சிக்கல்கள் காரணமாக இத்திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானது. ஆனால், இப்போது இறுதிக் கட்ட சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.
அத்தனை பிரச்னைகளைச் சமாளிக்க சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது கடைசிக் கட்ட சவால்களைச் சமாளித்து வருகிறேன்.
படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க முடியும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
வேறு படங்களைச் செய்வதற்கு எனக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அவை எனக்கு சுவாரஸ்யமாகத் தெரியவில்லை. இந்தப் படம் வெளியாக வேண்டும் என்பதால், வேறு படங்களை இயக்கவில்லை" எனக் கூறியிருக்கிறார்.















