செய்திகள் :

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாவட்ட அளவில் சாதனை!

post image

முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவில் ஜூடோ விளையாட்டுப் போட்டி 2026-27,தென்காசி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில்  15/09/2026 அன்று நடத்தியது. இப்போட்டியில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறுபள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் எம்.பி.சர்ஜின் பிளஸ் 73 கிலோ இடைப்பிரிவில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை வென்று மாநில அளவிற்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவனுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சி.எம்.டிராபி ) சான்றிதழ், வெள்ளி பதக்கம் மற்றும் காசோலை ரூபாய் 2000 வழங்கி உள்ளார்கள். 

அதுபோல இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் சாதனை.

பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 21/ 9/ 2026 அன்று நடத்திய நீச்சல் போட்டி, செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆர். சந்தோஷ் பிரவீன் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 50 மீட்டர் பிரஸ்ட்ராக் போட்டியில் முதலிடம் வென்று தங்கப்பதக்கத்தையும், 50 மீட்டர் பிரீ ஸ்டைல் போட்டியில் இரண்டாம் இடம் வென்று வெள்ளிப் பதக்கத்தையும், 50 மீட்டர் பேக்ஸ் ட்ராக் போட்டியில் இரண்டாம் இடம் வென்று வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். 

வெற்றி பெற்ற மாணவர்களை பாரத் பள்ளி குழுமத்தின் தலைவர் திரு. மோகன கிருஷ்ணன், செயலாளர் டாக்டர்.காந்திமதி மோகன கிருஷ்ணன்,கல்வி ஆலோசகர் திருமதி.உஷா ரமேஷ், இயக்குனர் இராதா பிரியா, பள்ளி முதல்வர் திருமதி. தர்மசுபத்தினி மற்றும் தலைமை ஆசிரியர் திரு. செல்வ லிங்கம் ஆகியோர் பாராட்டினர்.

கல்வி இன்டர்கான்டினென்டல்: நாட்டின் முதல் ‘என்பிஎஸ் வாத்ஸல்யா – நிதி ரீதியாக வலுவூட்டப்பட்ட பள்ளி’

மதுரையில் செயல்பட்டு வரும் கல்வி இன்டர்கான்டினென்டல் பள்ளி, மாணவர்களிடையே நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறு வயது முதலே பொறுப்பான நிதிப் பழக்கங்களை வளர்த்து வருவதற்காக, ‘என்பிஎஸ் வாத்ஸல்யா – நிதி ரீத... மேலும் பார்க்க

VIT போபால் பல்கலைக்கழகத்தின் 7வது ஆண்டு பட்டமளிப்பு விழா: 3571 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவம்

VIT போபால் பல்கலைக்கழகம் அக்டோபர் 3 ஆம் தேதி தனது 7வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை சிறப்பாக நடத்தியது. பல்வேறு கல்வித் துறைகளைச் சேர்ந்த மொத்தம் 3,571 பட்டதாரிகளுக்கு, அவர்களின் கல்விசார் சாதனைகள் மற்றும... மேலும் பார்க்க

"அதைப் படிக்கணும்னு தோணுச்சு"- முதல் தலைமுறையாகப் படிக்கும் பழங்குடிக் குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் வாழும் பழங்குடிக் குழந்தைகளிடம் கல்வி மீதான ஈடுபாட்டை வளர்க்க, ஐ.ஐ.டி, இலயோலா போன்ற பெரிய கல்வி நிறுவனங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.தமிழ்நாட்டில் உ... மேலும் பார்க்க

170 ஆண்டுகள்; தென்னிந்திய உயர்கல்வியின் முகவரி: தன்னாட்சி கல்விக்கு விதைபோட்ட சென்னைப் பல்கலைக்கழகம்

1857-ல் தொடங்கிய ஒரு கல்விப் பயணம்... இன்று தென்னிந்தியாவின் உயர்கல்வி வரலாற்றையே வடிவமைத்த நிறுவனமாகத் திகழும் சென்னைப் பல்கலைக்கழகம்!ஒரு பல்கலைக்கழகம் என்பது பாடங்களை கற்றுக்கொடுக்கும் ஓர் இடம் மட்ட... மேலும் பார்க்க

ஒன்றாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு வினாத்தாள் கசிவு? மாற்று வினாத்தாள் அனுப்பி வைப்பு - நடந்தது என்ன?

மத்திய மாநில அரசுகள் நடத்தும் குரூப் தேர்வுகள், நீட் உள்ளிட்ட உயர்கல்வி தேர்வுகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய சம்பவங்களை பார்த்திருக்கிறோம... மேலும் பார்க்க

தனியார் பல்கலை.,: "தவெக-விடம் பாஜகவின் போக்கு.!" - அமளிக்கு மத்தியில் சைலன்டாக நிறைவேற்றிய அரசு

கடந்த செப்டெம்பர் 8 அன்று தமிழக சட்டமன்றத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் 'பி. விஸ்வநாதன்', மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான ஒழுங்குமுறை விதிமுறைகளை தளர்வாக்கும் வகையில், '2019-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க