செய்திகள் :

இளையான்குடியில் போதை பொருள் தயாரிப்பு ஆய்வகம் கண்டுபிடிப்பு - கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது!

post image

ராமநாதபுரம் காவல்துறையின் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கடந்த 27-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராமநாதபுரம் நகராட்சி  குடிநீர் தொட்டி அருகே திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மார்த்தாண்டம் செட்டிசார்விளையை சேர்ந்த  ஜபீஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு கிராம் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை கைபற்றினர்.

சாகுல் ஹமீது

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உமருல் ஜமீன், முகம்மது அஸ்லம் ஆகியோரிடம் இருந்து இந்த போதை பொருளை வாங்கியது தெரிய வந்தது.  இதையடுத்து ராமநாதபுரம் அருகில் உள்ள காரிகூட்டம் கிராமத்தில் உள்ள அவர்களது வீடுகளில் சோதனை நடத்தி மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரண நடத்தினர்.

ஜாகீர் உசைன்

இந்த விசாரணையில் இளையான்குடியை சேர்ந்த ஷேக் முகம்மது என்பவரிடம் இருந்து இந்த போதை பொருள் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 120 கிராம் போதை பொருளை கைபற்றினர். இதனை இளையான்குடியை சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் என்பவரிடம் இருந்து கைமாறியதாக தெரியவந்தது.

இதையடுத்து ஹபீபுர் ரஹ்மான், சிக்கந்தர் பாதுஷா ஜமால் மொய்தீன் ஆகியோரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 580 கிராம் போதை பொருளை கைபற்றினர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த போதை பொருள் கும்பலின் முக்கிய குற்றவாளி இளையான்குடியை சேர்ந்த ஷாகுல் ஹமீது என்பது தெரியவந்தது.

சிக்கந்தர்

இவர் போதை பொருளுக்கான மூலப்பொருட்களை ஜாஹிர் உசேனுக்கு அனுப்பியதையும், அவர் தனக்கு சொந்தமான லேத் பட்டறையில் ரகசியமாக போதை பொருளான மெத்தபெட்டமைனை தயாரித்தும் போலீஸார் கண்டறிந்தனர். அங்கு சோதனை நடத்திய போலீஸார் 670 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் போதை பொருள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை கைபற்றினர்.

இதையடுத்து போதை பொருள் தயாரிப்பு கும்பலை சேர்ந்த 10 பேரை கைது செய்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸார், ஒட்டுமொத்தமாக 1.37 கிலோ கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளையும் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருடு போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்; CCTV-யால் சிக்கிய எலி; இன்ஸ்டாவைக் கலக்கிய திருட்டு!

கர்நாடகா மாநிலம் துமகுரு என்ற இடத்தில் நகைக்கடை வைத்திருப்பவர் விஷ்வாஸ். இவர் முதல் நாள் இரவு கடையை அடைத்து மறுநாள் வந்து கடையைத் திறந்து வியாபாரத்தைக் கவனித்தபோது கடையிலிருந்த வைரக்கல் பதித்த தங்க ஆப... மேலும் பார்க்க

உருளைகிழங்கு மூடைகளுடன் கடத்தி வரப்பட்ட கஞ்சா பார்சல்கள் - 3 பேரை கைது செய்த க்யூ பிரிவு போலீஸ்!

சமீப காலமாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கஞ்சா, வலி மாத்திரைகள் மற்றும் மெத்தமைன், ஐஸ் போன்ற போதை மருந்துகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்படுவது அதிகரித்து வருகிறது. கடற்பரப்பில் நடைபெறும் கடத்தல் சம்பவ... மேலும் பார்க்க

ஈரோடு:‌ 100 கிலோ சந்தன மரக்கட்டைகளை வெட்டி பதுக்கிய கடத்தல் கும்பல்; வனத்துறையிடம் சிக்கியது எப்படி?

'சந்தனக் காடு' என அழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கையாகவே சந்தன மரங்கள் செழித்து வளரும் பகுதிகளாக உள்ளன. இந்தக் காடுகளில் காணப்படும் சந்தன மரங... மேலும் பார்க்க

சிவகங்கை: 'முன்விரோதம், போதை, கோபம்' - 18 மணி நேரத்தில் 3 கொடூரக் கொலைகள்; அச்சத்தில் மக்கள்

குடும்பத் தகராறு, ரவுடிகளுக்கிடையேயான முன்விரோதம், போதை மற்றும் எல்லை மீறிய கோபம் என வெவ்வேறு பின்னணிகளில் நடந்த 3 கொடூரக் கொலையால் சிவங்கை மாவட்டமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. "சிறையிலிருந்து வெ... மேலும் பார்க்க

வாகனத்தில் அடிப்பட்டு இறக்கும் மான்கள்; 'மான் பூங்கா' அமைக்க கோரிக்கை; கைவிரிக்கும் அதிகாரிகள்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள கல்லகம் பகுதியில் கலகம் ஏரி உள்ளது. திருச்சி- அரியலூர் மாவட்டங்களின் எல்லையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த ஏரியின் அருகில் காப்புக் காடுகள் உள்ளதால், அந்தக்... மேலும் பார்க்க

திருச்சி: வண்டல் மண் எடுக்க ரூ.4,000 லஞ்சம் - நீர்வளத்துறை அதிகாரி கைது!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தைச் சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட். இவர், முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிரு... மேலும் பார்க்க