செய்திகள் :

"இஸ்ரேலும் கைகோக்கிறது: ஈரான் போருக்கு தயார்; ஆனாலும் நிறுத்துகிறோம்" - ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

post image

போர்... போர் நிறுத்தம்... புரிந்துணர்வு ஒப்பந்தம்... போர் நிறுத்தம்... போர்... மூன்று நாள்களுக்கு போர் நிறுத்தம்... மீண்டும் போர் - இது தான் கடந்த 155 நாள்களாக ஈரான் - அமெரிக்கா போரில் நடந்து வரும் சம்பவங்கள்.

கடந்த 24-ம் தேதி முதல் இரு நாடுகளும் சத்தமில்லாமல் போர் நிறுத்தத்தில் இருந்தன. ஆனால், அமெரிக்காவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஜூலை 28-ம் தேதி செல்ல, மீண்டும் தாக்குதலை தொடங்கியது ஈரான்.

இதற்குப் பதிலடி கொடுக்க அமெரிக்காவும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

ட்ரம்ப் எச்சரிக்கை

நேற்று ட்ரம்ப், "ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். ஒரு கட்டத்தில் அவர்கள், 'எங்களால் இதற்கு மேல் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்று கதறும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்" என்று பேசியிருந்தார்.

ஈரான் தாக்குதல்
ஈரான் தாக்குதல்
இந்த நிலையில் ட்ரம்ப் தற்போது தனது ட்ரூத் பக்கத்தில் தாக்குதல் நிறுத்தம் குறித்து பதிவிட்டிருக்கிறார்...

"இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகம் இதுவரை கண்டிராத அளவிலான ராணுவப் பலத்தோடும், அதிகாரத்தோடும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகத் தாக்க தயாராக, முழு வீச்சில் அமெரிக்கா தயாராக இருக்கிறது.

கோரிக்கை வந்துள்ளது...

இருந்தாலும், ஒரு ஒப்பந்தத்திற்கான எல்லைக்கோடுகள் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதால், எந்தவொரு தாக்குதலையும் நிறுத்தி வைக்குமாறு ஈரான் மற்றும் இதர மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து நமக்குக் கோரிக்கை வந்துள்ளது.

இதில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை உடனடியாக, முழுமையாக மற்றும் முற்றிலுமாகத் திறப்பதும், ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அடங்கும்.

இஸ்ரேலும் கைகோக்கிறது

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் வருங்கால நலனைக் கருதியும், அதேபோல் வளம்மிக்க ஈரானின் எதிர்கால வாழ்வைக் கருதியும், விரைவாக ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன்.

இந்த உறுதிப்பாட்டில் இஸ்ரேல் நாடும் என்னுடன் கைகோக்கிறது. அனைவரும் உடனடியாக வேலையைத் தொடங்குங்கள், இதை விரைவாகச் செய்து முடியுங்கள்!"

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க