செய்திகள் :

"ஈரான் அமைதி ஒப்பந்தத்தோடு லெபனான் தாக்குதலும் நிறுத்தம்" - எங்கு, எப்போது கையெழுத்தாகிறது?

post image

நேற்று முன்தினம் (ஜூன் 13), இன்னும் 24 மணிநேரத்திற்குள் ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து என்று பாகிஸ்தானும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அமைதி ஒப்பந்தம் கையெழுத்து என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-உம் அறிவித்திருந்தனர்.

ஆனால், அது நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஈரான் போர் அமைதி ஒப்பந்தத்திற்காக தேதி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில், "இந்த மாபெரும் ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வரும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

எனக்கு முன்னால் இருந்த பல அதிபர்கள் ஈரானுடன் அமைதியை ஏற்படுத்த முயன்றார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தோற்றுப்போனார்கள்.

உண்மையான அமைதியை அடைய தங்களுக்கு உதவக்கூடிய ஒரு அதிபரை இந்தப் பிராந்தியத்தின் தலைவர்கள் இப்போதுதான் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.

வருகிற வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக ஹார்முஸ் நீர்ச்சந்தி மீண்டும் திறக்கப்படும்.

அதன் பிறகு இந்தப் பிராந்தியத்திற்கும், ஏன் ஒட்டுமொத்த உலகத்திற்குமே இரண்டு பக்கமிருந்தும் எண்ணெய் விநியோகம் மீண்டும் தடையின்றிப் பாயத் தொடங்கும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் இங்கு வெள்ளிக்கிழமை என்று குறிப்பிடுவது வருகிற ஜூன் 19-ஐ தான்.

ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்கு கையெழுத்தாகிறது என்பது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் எக்ஸ் தளப் பதிவு...

"அமெரிக்கா - ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது

தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்து விழா வருகிற வெள்ளிக்கிழமை, ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறும்.

ஜே.டி.வான்ஸ் - ஷெபாஸ் ஷெரீப்
ஜே.டி.வான்ஸ் - ஷெபாஸ் ஷெரீப்

இந்த மோதலுக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதில் காட்டிய அர்ப்பணிப்புக்காக அமெரிக்காவிற்கும், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இந்தச் சமரச முயற்சியில் எங்களது சகோதர நாடான கத்தாரின் மாபெரும் தலைமை தந்த ஆதரவிற்கும் எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விஷயத்தில் சவுதி அரேபியா மற்றும் துருக்கி குடியரசின் தொலைநோக்கு மிக்க தலைமைகள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்கு எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஒப்பந்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, சமரசம் செய்த நாடுகள் இந்த வாரத்தில் தொடர்ச்சியான பல சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யும்.

இந்தப் பூர்வாங்க அமலாக்க விவாதங்கள், வரவிருக்கும் தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளுக்கும் அதிகாரப்பூர்வ கையெழுத்து விழாவிற்கும் வலுவான அடித்தளத்தை அமைக்கும்".

'வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதல்வர் இன்று.!' - உதயநிதி காட்டம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வரு... மேலும் பார்க்க

ஈரான் அமைதி ஒப்பந்தம் முடிவாகிறதே... ஹார்முஸ் நீர்ச்சந்தி எப்போது திறக்கப்படும்? சுங்க வரி உள்ளதா?

ஈரானில் போர் தொடங்கியது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், உலக நாடுகளை நேரடியாகப் பாதித்த ஒன்று - ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல். இதனால், எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்ச... மேலும் பார்க்க

ஓமனில் உயிரிழந்த தமிழக மாலுமி நிஷாந்த் - உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை தீவிரம்

ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் உடல்நல குறைவால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மாலுமி நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு... மேலும் பார்க்க

'தமாகா கட்சியை விட்டு விலகுகிறேன்; விலகினாலும்.!' - மாநில பொதுச் செயலாளர் யுவராஜா உருக்கம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் யுவராஜா தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் தமாகா கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ... மேலும் பார்க்க

குழந்தை பாலியல் வன்கொடுமை: 'பொறுப்பு' என்ற சொல்லுக்கு பொருள் தெரியாத ஆட்சியில்.!' - கனிமொழி கண்டனம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று மாலை 3 வயது குழந்தை... மேலும் பார்க்க

`உத்தவ் கட்சியில் மீண்டும் பிளவு' - தாக்கரே கூட்டிய கூட்டத்தை புறக்கணித்த 5 எம்.பி.க்கள்?

மகாராஷ்டிராவில் சிவசேனா 2022-ம் ஆண்டு பிளவை சந்தித்தது. அக்கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் துணையோடு கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். ஆனாலும் கட... மேலும் பார்க்க