செய்திகள் :

குழந்தை பாலியல் வன்கொடுமை: 'பொறுப்பு' என்ற சொல்லுக்கு பொருள் தெரியாத ஆட்சியில்.!' - கனிமொழி கண்டனம்

post image

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று மாலை 3 வயது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பொதுமக்கள் உதவியுடன் அந்த பகுதியில் தேடி உள்ளனர்.

அப்போது முட்புதரில் காயங்களுடன் குழந்தையை பார்த்த மக்கள் குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

குழந்தை பாலியல் வன்கொடுமை| Represental images
குழந்தை பாலியல் வன்கொடுமை| Represental images

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அக்குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்திருக்கிறது.

குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பாக பீகாரைச் சேர்ந்த மஞ்சி (19) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டிருக்கும் கண்டன பதிவில், " கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

'வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதல்வர் இன்று.!' - உதயநிதி காட்டம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வரு... மேலும் பார்க்க

ஈரான் அமைதி ஒப்பந்தம் முடிவாகிறதே... ஹார்முஸ் நீர்ச்சந்தி எப்போது திறக்கப்படும்? சுங்க வரி உள்ளதா?

ஈரானில் போர் தொடங்கியது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், உலக நாடுகளை நேரடியாகப் பாதித்த ஒன்று - ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல். இதனால், எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்ச... மேலும் பார்க்க

ஓமனில் உயிரிழந்த தமிழக மாலுமி நிஷாந்த் - உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை தீவிரம்

ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் உடல்நல குறைவால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மாலுமி நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு... மேலும் பார்க்க

'தமாகா கட்சியை விட்டு விலகுகிறேன்; விலகினாலும்.!' - மாநில பொதுச் செயலாளர் யுவராஜா உருக்கம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் யுவராஜா தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் தமாகா கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ... மேலும் பார்க்க

`உத்தவ் கட்சியில் மீண்டும் பிளவு' - தாக்கரே கூட்டிய கூட்டத்தை புறக்கணித்த 5 எம்.பி.க்கள்?

மகாராஷ்டிராவில் சிவசேனா 2022-ம் ஆண்டு பிளவை சந்தித்தது. அக்கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் துணையோடு கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். ஆனாலும் கட... மேலும் பார்க்க