செய்திகள் :

ஈரான் - இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?

post image

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவப் பிரிவுகள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.

அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்குச் சொந்தமான துபாய் சொத்துகள் குறிவைக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஈரானின் ஏவுகணைகள் துபாயின் முக்கிய இடங்களான 'பாம் ஜுமேரா' (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற 'புர்ஜ் அல் அரப்' (Burj Al Arab) ஹோட்டலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அங்கு பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், துபாயில் 'ட்ரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கிளப்' மற்றும் 'ட்ரம்ப் எஸ்டேட்ஸ்' போன்ற ஆடம்பரக் குடியிருப்புகள் உள்ளன. தற்போது 'ட்ரம்ப் டவர் துபாய்' கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன.

இந்த நிலையில், ''ஈரான் தாக்குதலில் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ட்ரம்ப் குடும்பத்தின் முக்கிய முதலீட்டு மையங்கள் தகர்க்கப்பட்டன" என்ற வாசகத்துடன் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்

ஆனால் இதுவரை உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட இடங்கள் ட்ரம்ப் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் நேரடி ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Iran: "எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்..." - அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரைத்தார்?

ஈரானை 37 ஆண்டுகளாக இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த அயதுல்லா அலி கமேனியின் மரணத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள்கள் துக்க காலமும... மேலும் பார்க்க

பூசாரிகள் மாநாடு: ``திமுகவின் இறை நம்பிக்கை இதுதான்" - முதல்வர் ஸ்டாலின்!

சென்னை, மயிலாப்பூர், ஆர்.கே. மடம் சாலை, கபாலீசுவரர் திடலில் நேற்று (28.2.2026) கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ வேலு, குன்றக்குட... மேலும் பார்க்க

ஓபிஎஸ் வீட்டின் கேட்டில் உள்ள இரட்டை இலை சின்னம்... வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரம்!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் உடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார்.திமுக... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.தொழில் வளர்ச்சி, மகளிர் நலன், மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சி, ஆதிதிராவிட பழங்குடிய... மேலும் பார்க்க

அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகண... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா அமைச்சர் கூட்டிய கூட்டம்; "பங்கேற்க முடியாது" - மெசேஜ் அனுப்பிய அதிகாரி சஸ்பெண்ட்

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவர் மறைந்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கோபினாத் முண்டேயின் மகள் ஆவார்.மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்... மேலும் பார்க்க