செய்திகள் :

ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?

post image

ஈரான் போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று 15 அமைதி பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தார்.

போர் நிறுத்தத்திற்கு இதுவரை கொஞ்சம் முரண்டு பிடித்து வந்த ஈரான் தற்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் 'The Wall Street Journal' வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஈரான் முன்வைக்கும் 5 நிபந்தனைகள்...

> ஈரான், அமெரிக்கா இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

> அமெரிக்கா எதிர்காலத்தில் ஈரான் மீது எந்த ராணுவ தாக்குதலையும் நடத்தாது என்கிற உறுதி வேண்டும்.

ஈரோன் போர்
ஈரோன் போர்

> இப்போதைய தாக்குதலில் ஈரானில் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகளுக்கு அமெரிக்கா நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

> ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டுப்பாடு வேண்டும்.

> ஈரான் ஏவுகணைத் திட்டம் குறித்து அமெரிக்கா எந்தப் பேச்சுவார்த்தையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது".

இவற்றுக்கு ஒப்புக்கொண்டாலே அடுத்த பேச்சுவார்த்தை என்று ஈரான் தெரிவித்துள்ளதாம்.

இதற்கு அமெரிக்காவின் பதில் என்னவாக இருக்கப் போகிறதோ?

கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒற்றைத் தொகுதியில் ஒதுங்கிய அதிமுக; 5 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கன்னியாகுமரியில் அ.தி.மு.க-வின் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ-வாக உள்ளார். நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க-வின் எம்.ஆர்.காந்தி, பத்மநாபப... மேலும் பார்க்க

`என்.டி.ஏ கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?' - பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி திமுக அதிமுக என இரு கட்சியிடையேயும் இழுபறியாகவே நீடித்தது. இந்த நிலையில்... மேலும் பார்க்க

"தோழமை தொடர்வோம்; களத்தில் வெல்வோம் -175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது!"- ஸ்டாலின் அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் 175 இடங்களில் உதயசூரியன் களம் காண இருக்கிறது என்று மு.க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், "2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க த... மேலும் பார்க்க

சைதாப்பேட்டை முதல் காரைக்குடி வரை; அமமுக போட்டியிடும் உத்தேச தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அந்த 11 தொகுதிகள், அங்கு போட்டியிடும் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளிய... மேலும் பார்க்க

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் சௌமியா அன்புமணி?- பாமக போட்டியிடும் தொகுதிகள், உத்தேச வேட்பாளர்கள்?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு (அன்புமணி அணி) 18 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பா.ம.க போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்... மேலும் பார்க்க

“த.வெ.க-வுடன் தனி அணி; `போட்டி' காங்கிரஸுக்கு 20 சீட்!” - காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த கலகக்குரல்!

தி.மு.க-வுடன் கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், இப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததற்காக காங்கிரஸ் கட்சியில் சத்தமில்லாமல் ஒரு டீம் வெளியேற தயாராகி... மேலும் பார்க்க