"ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கிறது" - இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்கு ஈரானின் 'ஷா...
"ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கிறது" - இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்கு ஈரானின் 'ஷார்ப்' பதில் என்ன?
ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்...
“அமெரிக்காவிற்குள்ளேயே ஈரானிய ரகசியக் குழுக்கள் ஊடுருவிச் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளுக்குத் தீங்கு விளைவிப்பதே இவர்களின் நோக்கம். இந்த ஆபத்து அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நீள்கிறது.
ஈரான் ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. இது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் நன்றாகவே தெரியும். ஈரான் அந்தத் திறனை எட்டுவதற்கு இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படையும், அமெரிக்க மத்தியக் கட்டளைப் பிரிவும் தயாராகி வருகின்றன. இது குறித்த இறுதி முடிவை ட்ரம்ப்தான் எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஈரான் பதிவு
இன்னொரு பக்கம், ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரானை முற்றுகையிடுவதற்கான ட்ரம்ப் மற்றும் அவரது தோல்வியடைந்த அணியின் திட்டங்கள், அவர்களது தோல்வியுற்ற போர் வியூகத்தைப் போலவே ஒரு மாயையான, பயனற்ற முயற்சியாகும்.
இந்த முற்றுகையை உடைத்தெறியவும், எந்தவொரு புதிய ஆக்கிரமிப்பிற்கும் முழு பலத்துடன் பதிலடி கொடுக்கவும் ஈரான் தேசமும், ஆயுதப் படைகளும், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் உறுதியுடன் உள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.















