செய்திகள் :

திருப்பரங்குன்றம்: 'தூணில் தீபமேற்ற முடியவில்லை' - ஆட்சியர்; அவமதிப்பு வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி

post image

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாத விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைச் செயல்படுத்த முடியவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுதாரர்கள் முறையிட்டுள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான தூணில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்துத் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி முக்கிய இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

அதில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், தர்கா அருகே உள்ள கல்தூணில் இந்த ஆண்டு மட்டும் ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி அளித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியரின் நேரடி மேற்பார்வையில், பலத்த பாதுகாப்புடன் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே சென்று தீபம் ஏற்ற வேண்டும் எனவும், தேவைப்பட்டால் துணை ராணுவப் படையினரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், கார்த்திகை தீபத் திருநாளன்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அந்தத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதனையடுத்து, இந்த விவகாரம் நீதிபதி அரவிந்த் குமார் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் மற்றும் இந்து தர்ம பரிஷத் சார்பில் வழக்கறிஞர் ஜெய் சுகின் ஆகியோர் ஆஜராகி கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

உயர் நீதிமன்றத்தில் தீபம் ஏற்றுவோம் எனக் கூறிவிட்டு, தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு திட்டமிட்டே மீறியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

உச்ச நீதிமன்றம்

இதற்குப் பதிலளித்த மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், "உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஆட்சியர் மேற்கொண்டார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக அந்தத் தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை. இதற்கான காரணங்களை விளக்கி, நீதிமன்றம் கூறியபடி மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ஆட்சியர் தரப்பு விளக்கத்தை ஏற்க மறுத்த மனுதாரர்கள், அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து  அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். அதே சமயம், "உத்தரவு மீறப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தால், அது நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்" என நீதிபதிகள் உறுதி அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், தமிழக அதிகாரிகள் மீது விரைவில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மீண்டும் சட்டரீதியான சூடுபிடித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தூண்: "மதுரை IAS அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வார் போல" - நீதிபதி

மதுரையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமத்ஜி ஆகியோர் முன் இன்று விசாரணைக... மேலும் பார்க்க

ஜீவனாம்சம் எப்போது கேட்கலாம்? கணவரும் ஜீவனாம்சம் கேட்கலாமா? | சட்டம் சொல்வது என்ன? - 19

“கணவரைப் பிரிந்து வாழ்கிறேன். வருமானமும் இல்லை. விவாகரத்து வழக்குத் தொடர்ந்தால்தான் ஜீவனாம்சம் கிடைக்குமா? வழக்கு நடத்துவதற்கான செலவைக்கூட கேட்க முடியுமா?”திருமண வாழ்க்கையில் பிரச்னைகளைச் சந்திப்பவர்க... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரி அறநிலையத் துறை சீராய்வு மனு

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள 'தீபத்தூண்' பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின் சில பகுதிகளை மறுபரிசீலனை செய்யக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சீராய்வு ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம் - உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு மனு!

``திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் இந்தாண்டும் மட்டும் வரும் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றி கொள்ளலாம். பொதுமக்கள் யாரும் தீபம் ஏற்றும் இடத்திற்கு செல்ல அனுமதி கிடையாது" எனஎன உச்ச நீதிமன்றம் நேற்று... மேலும் பார்க்க

16 ஆண்டுக்கால சட்டப் போராட்டம்... கிறிஸ்தவர் - இந்து திருமணப் பதிவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆணுக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே 2009-ம் ஆண்டு நடைபெற்ற திருமணப் பதிவு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்... மேலும் பார்க்க

கணவன் மனைவியின் செல்போனையும் மனைவி கணவனின் செல்போனையும் சோதிக்கலாமா? | சட்டம் சொல்வது என்ன? - 18

உங்கள் கணவரோ அல்லது மனைவியோ, “நம்ம ரெண்டு பேரும் நம்ம செல்போன்களை மாற்றிக்கொள்வோம். உன்னுடைய போனை நான் பார்க்கிறேன்; என்னுடைய போனை நீ பார்” என்று திடீரெனக் கேட்டால், எந்தப் பதற்றமும் இல்லாமல் உங்கள் ச... மேலும் பார்க்க