செய்திகள் :

ஈரோடு: ``பூத் நிர்வாகிகளின் பெற்றோர்களை திமுகவினர் மிரட்டுகின்றனர்'' -நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு

post image

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். வாக்குச் சாவடி மையங்களில் பார்வையிட்ட சீதாலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரோடு கிழக்குத் தொகுதியில் பல வாக்குச் சாவடிகளில் ஆளுங்கட்சி பிரமுகர்களால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. 70 சதவீத வாக்குச் சாவடிகளுக்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை முகவர்களாக நாம் தமிழர் கட்சி சார்பில் நியமித்துள்ளோம். அவர்களின் பெற்றோர்களை அழைத்து திமுக-வினர் மிரட்டுகின்றனர். அவர்களின் குடும்பத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டோம்.

திமுக விசி சந்திரகுமார், நாதக சீதாலட்சுமி

திமுக-வினர் சர்வ சாதரணமாக வாக்குச் சாவடிக்குள் செல்போன்களை எடுத்துச் சென்று வீடியோ எடுக்கின்றனர். செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களை வீடியோ எடுக்க கூடாது என மிரட்டப்படுகின்றனர். நீங்கள் ஏன் வாக்குச் சாவடிக்குள் வந்தீர்கள்? என கேட்டால், வேட்பாளரின் முகவர், ஆளுங்கட்சி பிரமுகர் என்று கூறுகின்றனர். இது ஏற்புடையதல்ல. வேட்பாளராகிய என்னை கட்சித் துண்டு போடக் கூடாது என்று திமுக-வினர் மிரட்டுகின்றனர்.

தங்களிடம் அதிகாரம் இருக்கிறது. அது தங்களுக்குத்தான் மீண்டும் கிடைக்கும் என திமுக-வினர் நினைக்கின்றனர். ஆனால், இளைஞர்கள் மற்றும் அரசியலில் மாற்றம் வர வேண்டுமென நினைப்பவர்கள் நாம் தமிழரைத்தான் ஆதரிப்பார்கள் என நம்புகிறோம். ஆனால், எங்கள் பூத் நிர்வாகிகளுக்கு நெருக்கடி கொடுப்பது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.

சீதாலட்சுமி

கடந்த தேர்தலின்போது, 60 ஆயிரம் வாக்குகள் பதிவாகவில்லை. ஆனால், இந்த தேர்தலில் மக்கள் தன்னெழுச்சியாக வாக்களிப்பதை காண முடிகிறது. பெண் ஒருவரின் வாக்கை வேறொருவர் போட்டது குறித்து தற்போதுதான் தகவல் கிடைத்தது. உரிய ஆதாரம் இல்லாமல் என்னால் குற்றம் சொல்ல முடியாது. வாக்குச் சாவடி முழுவதும் திமுகவினர் வசம்தான் உள்ளது" என்றார்.

இந்தியர்களுக்கு கை விலங்கு: "ட்ரம்ப் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்" - மௌனம் கலைத்த மோடி

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சம்பவம் இந்தியாவில் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.டொனால்டு ட்ரம... மேலும் பார்க்க

பாலியல் புகாரில் IPS அதிகாரி சஸ்பெண்ட்: ``குடும்பத்தை அவமானப்படுத்த நோக்கம்'' - DGP-யிடம் மனைவி மனு

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராகப் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் திடீரென இடைநீக்கம் செய்யப்படிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நடவடிக்கையானது, சென்னை போலீஸ் கமிஷனர் அல... மேலும் பார்க்க

Corruption: உலகின் டாப் 100 ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?

உலகின் ஊழல் நிறைந்த 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பால் 2024-ம் ஆண்டுக்கான `2024 ஊழல் உணர்வு அட்டவணை' (Corruption Perceptions Index (CPI)) வெளியிடப... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள்: ``விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம், தைரியமாக புகார்‌ கொடுக்கின்றனர்'' -கீதாஜீவன்

முதியோர் தின கொண்டாட்டம்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உ... மேலும் பார்க்க

"திராவிட மாடல் ஆட்சியைக் காமராஜர் ஆட்சியாகப் பார்க்கிறோம்" - செல்வப்பெருந்தகை பளீச்

"இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட 'ஈகோ' மோதல்தான் டெல்லியில் பா.ஜ.க வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?""டெல்லியில் 100 சதுர அடியில் 60 வாக்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.... மேலும் பார்க்க

இன்று அறிமுகமான `புதிய வருமான வரிச் சட்டம்!' -முக்கிய அம்சங்கள் என்னென்ன?!

கடந்த 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர், 'அடுத்த வாரம் புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்' என்று கூறியது, இன்று நிறைவேறி இருக்கிறது.இன்று நடந்த கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ப... மேலும் பார்க்க