செய்திகள் :

"உக்ரைனை புதின் தாக்கினால், ரஷ்யாவை ட்ரம்ப் தாக்க வேண்டும்" - ஜெலன்ஸ்கியின் 'பாதுகாப்பு' கோரிக்கை

post image

ரஷ்யா - உக்ரைன் போரில் ஆரம்பத்திலிருந்தே உக்ரைன் பக்கம்தான் நிற்கிறது அமெரிக்கா.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றவுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கொஞ்சம் கருத்து முரண் ஏற்பட்டதுதான். பின்னர், போர் விஷயத்தில் உக்ரைனுக்கு ஆதரவாகத்தான் பேசி வந்தார் ட்ரம்ப்.

ஆனால், கடந்த வாரம், ரஷ்யாவுடன் ட்ரம்ப் டீசல் ஒப்பந்தம் போட்டதும் ஜெர்க் ஆகிவிட்டன உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளும்.

ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தம் போட்டாலும், அமெரிக்கா உக்ரைனுக்குத் தேவையான பாதுகாப்பு ஆதரவுகளை இன்னும் தந்துகொண்டுதான் இருக்கிறது. இதை உக்ரைனும் ஒப்புக்கொள்கிறது.

ட்ரம்ப் - புதின்
ட்ரம்ப் - புதின்

வருத்தம்

ஆனாலும், ஜெலன்ஸ்கிக்கு,

> ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதற்கு அமெரிக்கா உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,

> ரஷ்யாவுடன் போட்ட டீசல் ஒப்பந்தத்தை அமெரிக்கா உக்ரைனுடனே போட்டிருக்கலாமே என்றும் வருத்தம்.

உக்ரைனை புதின் தாக்கினால்...

இந்த நிலையில், உக்ரைன் போர் குறித்து நேற்று பேட்டி ஒன்று ஜெலன்ஸ்கி பேசியிருப்பதாவது...

“அமெரிக்காவிடமிருந்து உக்ரைனுக்கு நேரடியாகக் கிடைக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் நல்லதுதான். ஆனால் அதற்கும் மேல் அமெரிக்காவிடமிருந்து உக்ரைனுக்கு விவரங்கள் தேவை.

அதாவது, உக்ரைன் மீது புதின் தாக்குதல் நடத்தினால், ட்ரம்ப் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவார் என்கிற உத்தரவாதம் வேண்டும். இது ஒரு வலுவான பாதுகாப்பு உத்தரவாதமாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.

'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' - CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர்

காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து டெல்லியில் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடைபெறும... மேலும் பார்க்க

'பொதுப்பணித்துறை அமைச்சர் பதவிக்கு நிகரானது அதிமுக கிளைச் செயலாளர் பதவி' - எடப்பாடி பழனிசாமி பதிலடி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்... மேலும் பார்க்க

'அவரை அடக்குங்க முதல்ல...' - மாநகராட்சி கூட்டத்தில் மோதிய சேகர் பாபு - தவெக எம்.எல்.ஏ தாமு!

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்க மேயர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட கூட்டம் ரிப்பன் பில்டிங்கின் அம்மா மாளிகையில் நடந்திருந்தது. அதில், திமுக எம்.எல்.ஏ சேகர் பா... மேலும் பார்க்க

மின் கொள்முதல்: ``கூடுதல் செலவானாலும் மின்சாரம் வாங்க காரணம் இதுதான்" - அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு அரசியலில் மின்சாரத்துறை ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கவிருக்கும் செய்தி பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட... மேலும் பார்க்க