செய்திகள் :

'உணர்ச்சிவசப்படாமல் ஒரு முடிவு!' - Delimitation ஆதரவு குறித்து ஸ்டாலின் என்ன பேசினார்?

post image

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்திருக்கிறது. இதுசம்பந்தமாக நடந்த திமுக எம்.பிக்களின் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், உணர்ச்சிவசப்படாமல் ஒரு முடிவு எடுத்திருப்பதாக பேசியிருக்கிறார்.

திமுக கூட்டம்
திமுக கூட்டம்

ஸ்டாலின் பேசியவை, "உணர்ச்சிவசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் தொகுதி மறுவரையறை பிரச்னையை நாம அணுகியுள்ளோம்.

தொகுதி மறுவரையறை மசோதா திரும்ப கொண்டு வரப்படும் போது தி.மு.க. என்ன நிலைப்பாடு எடுக்கும் என்று தான் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுக்க பேசப்பட்டு வந்தது. அதற்கான தெளிவான பதிலை நேற்று நாம் கொடுத்துள்ளோம்.

தொகுதி மறுவரையறை என்ற ஒரு ஆபத்து வர உள்ளது, இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என இந்தியாவிலேயே முதன்முதலாக எச்சரிக்கை மணி அடித்தது நாம் தான். இது பற்றிய விழிப்புணர்வை எல்லாருக்கும் ஏற்படுத்தினோம். இந்திய அளவில் தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தினோம்.

திமுக கூட்டம்
திமுக கூட்டம்

கடந்த ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் காலத்தில், நம் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், ஒருதலைப்பட்சமாக, எந்த உறுதியும் கொடுக்காமல் ஒரு மர்ம மசோதாவை கொண்டு வந்தார்கள். படித்து பார்க்க கூட உரிய கால அவகாசம் தராமல் அவசரமாக கொண்டு வந்த அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.

பாஜகவுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தோம். தற்போது இருக்கும் தொகுதி எண்ணிக்கையே தொடரலாம் என நாம விரும்பினாலும், தவிர்க்க முடியாத அரசியல் சாசன விதிப்படி தொகுதிகளை அதிகரிக்கும் போது , அதில் தமிழ்நாடு பாதிக்கப்பட கூடாது என ‘practical’-ஆன தீர்வை 2024-ஆம் ஆண்டே நாம் சட்டமன்ற தீர்மானம் மூலமாக முன்வைத்தோம்.

நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான பர்செண்டேஜை குறைத்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய மூன்றாண்டுகால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

தற்பொழுது மட்டும் நாம் இந்த முடிவை எடுக்கவில்லை எனில், 1971-ஆம் ஆண்டு சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்கு பதிலாக, கடைசியாக எடுத்த சென்சஸ் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையை மாற்றி அமைத்துவிடுவார்கள். அது தமிழ்நாட்டிற்கு பேராபத்தாகிவிடும். அதை நாம் தடுத்துவிட்டோம். நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது.

நம்மை பொறுத்தவரை, நாம் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளிலும் நாம் தற்போது வரை உறுதியாக உள்ளோம். தமிழ்நாட்டின் நலன் பறிபோக கூடாது, அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதில், நம் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளோம். 1967 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது 42-ஆக இருந்த தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளை 39-ஆகக் குறைத்தார்கள். ஆனால், தற்போது நம்முடைய பர்செண்டேஜில் எந்த மாற்றமும் இல்லாமல், நமக்கான தொகுதிகள் உயர்வதை உறுதி செய்துள்ளோம்.

நம்முடைய கடமையை நாம செய்துள்ளோம். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். நாடாளுமன்ற கூட்ட தொடரில் நம் நிலைப்பாட்டை ஓங்கிச் சொல்லுங்கள். கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்வதில் தயக்கம் கூடாது.

எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பதை சரியாகத் தீர்மானிக்க வேண்டும் என தலைவர் கலைஞர் சொல்லியிருக்கிறார். அதன்படி நடந்துகொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார்.

Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" - ஆதரவு குறித்து ஸ்டாலின்

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. திமுகவின் இந்த ஆதரவிற்கு விசிக... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்னென்ன?

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கான எம்.பி-க்கள் ஆலோசனைக் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``இதை இவ்வளவுதூரம் கொண்டுவந்திருக்க தேவையில்லை.!" - சீமான்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகவும், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``எம்.எல்.ஏ கைது நடவடிக்கைய... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை : திமுக ஓகே; இன்னும 7 உறுப்பினர்கள் தேவை... நாடாளுமன்ற எண்களும் பாஜக கணக்கும்!

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வர இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்கனவே இம்மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவிய... மேலும் பார்க்க

Delimitation: `` யாருக்கு அதிக அதிகாரம்? என்பதுதான் அடிப்படையான கேள்வி" - எம்.பி ஜோதிமணி

தொகுதிமறுவரையறை இந்தியாவின் அரசியல் மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அதிகாரச் சமநிலையையே மாற்றியமைக்க முயற்சிக்கும் ஒரு அடிப்படையான நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது தவெக அரசு" – தமிழிசை சௌந்தரராஜன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்துத் தடுக்க முயன்றதால், இன்று தீபம் ஏற்றுவதை உலகமே பார்க்கப்போகிறது என்று தவெக அரசை விமர்சித்து பேசியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜ... மேலும் பார்க்க