செய்திகள் :

உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் அதிர்ச்சி: 14 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே கட்சியில் சேர திட்டம்?

post image

2022ம் ஆண்டில் இருந்து சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக 2022ம் ஆண்டு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா இரண்டாக உடைந்தது. அதன் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து உத்தவ் தாக்கரே மீள்வதற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த 6 எம்.பி.க்கள் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்துவிட்டனர்.

இதையடுத்து அந்த 6 எம்.பி.க்களின் தொகுதிகளில் இப்போது உத்தவ் தாக்கரே சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். புதிய திருப்பமாக உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் தங்களது கட்சியில் சேர இருப்பதாக சிவசேனா(ஷிண்டே) கட்சியை சேர்ந்த அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் தெரிவித்து இருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "சிறிது காலம் காத்திருங்கள், 14-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் (ஷிண்டேவிடம்) வருவார்கள். ஏக்நாத் ஷிண்டே பேசுவதில்லை, அவர் தனது தாடியின் மீது கைகளால் மட்டுமே தடவுவார்.

இதை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவே ஒப்புக்கொண்டுள்ளார். ஏக்நாத் ஷிண்டே தனது தாடியின் மீது கைகளைத் தடவும்போது, ​​'ஆபரேஷன் டைகர்' வெற்றி பெற்றதாக அர்த்தம்," என்று பாட்டீல் கூறினார். ஆனால் இதனை சிவசேனாவின் மற்றொரு அமைச்சரான உதய் சாமந்த் மறுத்துள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய உதய் சாமந்த், அத்தகைய நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை என்று கூறினார். அதேசமயம் மகாவிகாஷ் அகாடியை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் மொத்தமுள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 37 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதற்கிடையே மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் வதேட்டிவார் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேரப்போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

விஜய் வதேட்டிவார்

இது குறித்து சிவசேனா அமைச்சர் உதய் சாமந்த் கூறுகையில்,''விஜய் வடேட்டிவார் எங்கள் மிகச் சிறந்த நண்பர். அவர் ஏக்நாத் ஷிண்டேயின் நெருங்கிய நண்பரும் கூட. அவர் எங்களுடன் இணைவது குறித்து வதேட்டிவார் ஒருபோதும் பேசியதில்லை.

ஆனால், விதர்பாவைச் சேர்ந்த அவரைப் போன்ற ஒரு செல்வாக்குமிக்க தலைவர் ஷிண்டேவுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏக்நாத் ஷிண்டே தலைமையேற்க ஏற்க வேண்டும் என்று மகாவிகாஷ் அகாடி எம்.எல்.ஏ.க்களே விரும்பினால், அதை நாங்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்? அவர்கள் கட்சியில் இணைய முன்வந்தால், வர வேண்டாம் என்று நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்?" என்றும் அவர் கூறினார்.

ஆனால் இதனை விஜய் வதேட்டிவார் கடுமையாக மறுத்துள்ளார். வதேட்டிவார் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் விரிவான பதிவு ஒன்றின் மூலம் பதில் கொடுத்துள்ளார். அதில்,"அவதூறு பரப்பும் அரசியலை நிறுத்துங்கள். நான் காங்கிரஸின் விசுவாசமான தொண்டன். கட்சி வழங்கிய ஒவ்வொரு பொறுப்பையும் நேர்மையுடன் நிறைவேற்றியுள்ளேன். மக்களின் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறேன்."என்று குறிப்பிட்டுள்ளார்.

சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிபா தனோர்கருடன், விஜய் வதேட்டிவாருக்கு கட்சிக்குள் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. சந்திரபூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டை யார் கையில் வைத்திருப்பது என்பது குறித்த இவர்களின் மோதல் பொதுவெளியிலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுவே வதேட்டிவார் சிவசேனாசேனாவில் இணையக்கூடும் என்ற வதந்திகளுக்கு காரணமாகும்.

விஜய் அரசின் முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் - ஒப்புதல் அளிக்க கூடுகிறது தமிழக அமைச்சரவை!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க