செய்திகள் :

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

post image

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நேரில் பார்த்​த​போது பிரமிப்​படைந்​தேன். அவருடன் பணி​யாற்​று​வது முதல் முறை என்​ப​தால், பதற்​றத்​தில் உறைந்​து​விடு​வேனோ என்று பயந்​தேன்.

ரஜினி - ஸ்ரேயா சரண்
ரஜினி - ஸ்ரேயா சரண்

அதனால் என்னை அவருக்கு அறி​முகப்​படுத்தி வைக்க ஷங்​கர் சாரிடம் கேட்​டுக் கொண்​டேன். அதைக் கேட்டு அவர் சிரித்​தார். ஷங்​கர் சார், ‘ரஜினி சாரைச் சந்​தி​யுங்​கள்’ என்று சொன்​னதைக் கேட்​டதும் ஆச்​சரியப்​பட்​டேன்.

அந்த நேரத்​தில் ‘வாஜி வாஜி’ பாடலுக்​கான ஒத்​தி​கை​யும் படப்பிடிப்​பும் நடந்து கொண்​டிருந்​தது. படப்​பிடிப்​பின்​போது, ரஜினி சார் என்னை இயல்​பாக உணர வைத்​தார்.

என் நெருங்​கிய நண்​பரைப் போலவே என்​னிடம் பழகி​னார். அந்தப் படத்தில் மிக​வும் சுவாரஸ்​ய​மான மனிதர்​களு​டன் பணியாற்​றும் வாய்ப்பு கிடைத்​தது என் அதிர்​ஷ்டம். ரஜினி சார் மிக மிக எளிமை​யானவர்.

ரஜினி - ஸ்ரேயா சரண்
ரஜினி - ஸ்ரேயா சரண்

படப்​பிடிப்​புத் தளத்​துக்கு வரும்​போது, எல்​லோரை​யும் சமமாகத்தான் நடத்​து​வார். அவருடன் அந்​தப் படத்​தில் பணி​யாற்றியது எனக்கு சிறந்த அனுபவ​மாக இருந்​தது.

அவர் ஏற்​கெனவே சூப்​பர்ஸ்டார். ‘உன் வேலையை நேசி, தொடர்ந்து கற்​றுக்​கொண்டே இரு’ என்று அவர் எப்​போதும் என்னிடம் சொல்வார்" என்று பகிர்ந்திருக்கிறார்.

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க

'ஏன் நீங்க நடிக்க வரணும்னு தான் முதல்ல கேட்டேன்.!' - லோகேஷ் கனகராஜ் குறித்து அனிருத்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள படம் ‘டிசி’. கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் வாமிகா கேபி நாயகியாக ... மேலும் பார்க்க

விஸ்வநாத் & சன்ஸ்: `சூர்யாவின் நடிப்பு Wow; மீண்டும் பார்க்க என்னை தூண்டுகிறது'- கார்த்தி பாராட்டு

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெய... மேலும் பார்க்க

DC: "வாமிகா கொடுத்த ஐஃபோன்; லோகேஷ் அண்ணன் கொடுத்த கம்ஃபோர்ட்" - ஜவஹர் சக்தி ஷேரிங்ஸ்!

லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் 'டிசி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் தேவதாஸ் கதாபாத்திரம் மற்றும் அவருடைய குழுவினரைச் சுற்றிதான் முழு படமும் நகரும். இந்தக் ... மேலும் பார்க்க

"Attendance போடணும்னு நினைக்கிற ஆள் நான் இல்ல" - படம் வெளியாகாமல் இருப்பது குறித்து அசோக் செல்வன்

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய படத்துக்கு ‘அன்பில் அவன்’ என்று பெயரிடப்பட்டு டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் கதையை எழுதி இருக்கிறார். அ... மேலும் பார்க்க