செய்திகள் :

`உழைச்சா தான் வாழுறதுக்கு பெருமை சாமி' - 76 வயதில் அதிரசம் சுட்டு விற்கும் செல்லாயி பாட்டி!

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பச்சளூர் கிராமத்தைச் சேர்ந்த 76 வயதான செல்லாயி பாட்டி, இன்றும் தனது உழைப்பால் பலருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

வயது முதிர்ந்தாலும், தனது கைவினைத் திறமையான அதிரசம் தயாரிக்கும் பணியை அவர் இன்னும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.

செல்லாயி பாட்டியின் கணவர் விவசாயம் செய்து வந்தார். விவசாய வருமானம் மட்டும் குடும்பத்தின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாத சூழலில், குடும்பத்திற்குத் துணையாக செல்லாயி பாட்டி சிறு தொழிலைத் தொடங்கினார்.

அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தனது பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆரம்பத்தில் சுண்டல், வடை போன்ற சிற்றுண்டிகளைத் தயாரித்து விற்பனை செய்தார். பின்னர் குடும்ப விழாக்கள், திருமணங்கள், காதணி விழா, சீமந்தம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அதிரசம், முறுக்கு, ரவா லட்டு உள்ளிட்ட பாரம்பர்ய இனிப்புகள் மற்றும் பலகாரங்களை ஆர்டரின் அடிப்படையில் தயாரித்து வழங்கத் தொடங்கினார்.

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது கடின உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கையை முன்னெடுத்துள்ளார். 100-க்கும் மேற்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளுக்குப் பலகாரங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார். அவரது கைப்பக்குவத்தில் தயாராகும் அதிரசம், இன்று பலரின் விருப்பமான சுவையாக மாறியுள்ளது.

இன்று அவரது பேரப்பிள்ளைகள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருவதோடு, அவர்கள் நல்ல நிலையை அடைந்துள்ளனர். அவருடைய பேத்தி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். குடும்பம் நல்ல நிலையில் இருந்தாலும், "உழைத்து வாழ்வதுதான் வாழ்க்கையின் பெருமை சாமி" எனக் கூறும் செல்லாயி பாட்டி, இன்றும் தனது தொழிலை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.

"இந்த வயதிலும் ஏன் இன்னும் வேலை செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, செல்லாயி பாட்டி கூறிய பதில் வாழ்க்கைக்கே ஒரு பாடமாக இருந்தது.

"மனுஷனா பிறந்துட்டா ஏதாவது சாதிக்கணும். கஷ்டப்பட்டுதான் முன்னேற முடியும். இந்த உலகம் ரொம்ப பெரியது. வாழ்க்கையில் கஷ்டமும் தடைகளும் வரும். அதையெல்லாம் எதிர்கொள்ள நம்மை நாமே தயார்படுத்திக்கணும். நான் மன உறுதியோடு இருந்ததால்தான் இன்னைக்கும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்."

இந்த வார்த்தைகள் வெறும் அறிவுரை அல்ல; அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை அனுபவங்களின் சுருக்கம்.

'40 ஆண்டுகளில் ரூ. 1.65 கோடி' - யாசகம் பெற்ற பணத்தை மக்களுக்கே தரும் முதியவர்; நெகிழ்ச்சிப் பின்னணி!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சட்டை இல்லாமல் துண்டைப் போர்த்திக்கொண்டு நுழைந்த முதியவர் ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார்கள். தான் ஒரு யாசகர் என்றும் மக்களிடம் யாசகம்... மேலும் பார்க்க

``பாவப்பட வேண்டாம்; எங்களைச் சமமாக நடத்தினாலே போதும்..!" - சவாலை சாதனையாக்கும் விழிச்சவால் மாணவர்

நம் மனம் பெரும்பாலும் இருப்பவற்றை மறந்து விட்டு, இல்லாதவற்றை நினைத்து ஏங்கும். ஆடம்பரத்தை எதிர்பார்த்து வருந்தும் மனிதர்களுக்கு மத்தியில் அத்தியாவசியத்திற்கே போராடுபவர்களும் உண்டு. நம்மிடம் என்ன இருக்... மேலும் பார்க்க

Mirror Writing: கண்ணாடிக்குள் தெரியும் திறமை... நெல்லை மாணவியின் வியக்க வைக்கும் பயணம்!

1330 திருக்குறளையும் எழுதியிருக்கேன்"ன்னு ஒரு ஆறாம் வகுப்பு மாணவி சொன்னா, 'அட... சூப்பரே!'ன்னுதான் தோணும்.ஆனா, "அதை எல்லாமே மிரர் ரைட்டிங்ல எழுதியிருக்கேன்"ன்னு சொன்ன உடனே ஆச்சர்யம் இன்னும் கொஞ்சம் அத... மேலும் பார்க்க

`சங்கிலியில கட்டிப்போட்டு வச்சிருந்தாங்க' தாயின் 23 வருட தவிப்பு; பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்த மகன்

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி, பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்த தனது மகனை அவரது தாய் மீட்டு வந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம், கோவையில் அரங்கேறியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த சுந்தரி மற்றும் அவரது கணவர் ... மேலும் பார்க்க

“முடி இல்லைன்னா என்ன? மூளை இருக்கே! முடியும்னு நினைச்சாலே...”- இவர்கள் SURVIVOR-கள் அல்ல WINNER-கள்

சென்னை, அடையாறு புற்றுநோய் மையத்தில் வருடா வருடம் புற்றுநோயிலிருந்து மீண்டுவந்தவர்களை ஒன்றுதிரட்டி “Survivor’s reunion” என்ற பெயரில் ஓர் அழகான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு இலவச சிகிச்சை... சேவையால் மனங்களை வென்ற அம்பாசமுத்திரம் மருத்துவர்!

இன்றைய காலத்தில் மருத்துவம் என்பது பலருக்கு ஒரு தொழிலாக இருக்கலாம். ஆனால் சிலர் மட்டும் அதை ஒரு சேவையாக பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த இளம் மருத்துவர் டாக்... மேலும் பார்க்க