செய்திகள் :

Hare Ram Pandey: கைவிடப்பட்ட 35 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் தாயுமானவன்!

post image

கைவிடப்பட்ட 35 பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக மாறியுள்ளார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண விவசாயி. அவர்தான் ஹரே ராம் பாண்டே.

அவரது மனிதநேயப் பயணம் 2004-ஆம் ஆண்டு தொடங்கியது. அன்று தேவ்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு புதரில், எறும்புகள் கடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையைக் கண்டார்.

உடனடியாக அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்கான செலவைச் சமாளிக்கக் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஹரே ராம் பாண்டே
ஹரே ராம் பாண்டே

அந்தச் சிறுமிக்கு தப்ஸி என்று பெயர் சூட்டி, தனது மகளாக ஏற்றுக்கொண்டார். அந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையின் திசையையே மாற்றியது.

அதன் பிறகு, பெற்றோரால் கைவிடப்பட்ட பல பெண் குழந்தைகளை ஒவ்வொருவராகத் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினார். இன்று அவர் 35 பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி, இருப்பிடம், பாதுகாப்பு மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அன்பான குடும்பச் சூழலை வழங்கி வருகிறார்.

இந்தக் குழந்தைகளின் நலனுக்காக நாராயண் சேவா ஆசிரமம் என்ற அமைப்பைத் தொடங்கினார். குழந்தைகளின் எதிர்காலத்துக்காகத் தனது சொந்த நிலங்களையும் சொத்துகளையும் விற்றார். தேவையானபோது கடன் வாங்கவும் பின்னடையவில்லை.

இந்த மனிதநேயப் பணி பரவலான கவனம் பெற்றது பிரபல வினாடி-வினா நிகழ்ச்சியான ‘கௌன் பனேகா குரோர்பதி’யில் தனது மகள்களுடன் கலந்துகொண்டபோது. நாடு முழுவதும் அவரது சேவை பேசப்பட்டது. அதன் பின்னர் பல தனிநபர்களும் அமைப்புகளும் உதவிக்கு முன்வந்தனர்.

“இந்தச் செயல்களுக்குப் பின்னால் என் மனைவி பவானி குமாரியின் பங்கு மிகப்பெரியது. குழந்தைகளை அன்புடன் பார்த்துக்கொள்வது அவர்தான். அவர்தான் என் முதுகெலும்பு” என்று ஹரே ராம் பாண்டே ஒரு நேர்காணலில் உணர்ச்சிபூர்வமாகக் கூறியுள்ளார்.

குழந்தை
குழந்தை

குழந்தைகளுக்குச் சரியான அடையாள ஆவணங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் ஆதார் அட்டைகளில் தனது பெயரையே தந்தை பெயராகப் பதிவு செய்துள்ளார்.

ரத்த உறவு இல்லாவிட்டாலும், உண்மையான அன்பு இருந்தால் ஒருவர் பல குழந்தைகளின் வாழ்க்கையை முழுமையாக மாற்ற முடியும் என்பதை ஹரே ராம் பாண்டே தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இன்று அவரால் வளர்க்கப்பட்ட பல மகள்கள் நல்ல படிப்பு மற்றும் வேலைகளில் சிறப்பாக உள்ளனர். அவர்களின் புன்னகையும் வெற்றியுமே ஹரே ராம் பாண்டேவின் மிகப்பெரிய சொத்து.

மதுரை: நாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவு; 850 நாள்களாகத் தொடரும் தொண்டு நிறுவனத்தின் மனிதநேய சேவை!

நாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவுநாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவுநாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவுநாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவுநாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவுநாள்தோறும் 1000 பேருக்கு மதிய ... மேலும் பார்க்க

உயிர்வாழ ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஆட்டோ ஓட்டும் 72 வயது முதியவர்; கேரளத்தில் கவனம் ஈர்த்த முகமது!

கேரள மாநிலம் ​கோழிக்கோடு மாவட்டம், பறம்பில் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது (72). அவரால் சாதாரணமாக காற்றைச் சுவாசிக்க முடியாது என்பதால், ஆக்ஸிஜன் சிலிண்டரைத் தனது இருக்கையின் பின்பக்கம் இணைத்து, முக... மேலும் பார்க்க

கடைசி நேரத்தில் உடல்நலம் பாதிப்பு: மகனுக்காக மீண்டும் மாணவியாக மாறி, ஐஐடி கனவை நிறைவேற்றிய தாய்!

தனது மகனின் மருத்துவ அவசர நிலையிலும் அவனது ஐஐடி (IIT) கனவு கலைந்துவிடக் கூடாது என்பதற்காக, அவனது அறிவியல் மற்றும் பொறியியல் வகுப்புகளில் ஒரு தோழியைப் போல ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டு தனது மகனின் கன... மேலும் பார்க்க

வெனிசுலா: `நான் உயிரோடு இருப்பதை என் மனைவியிடம் சொல்லாதீங்க' - இடிபாடுகளில் சிக்கியவரின் கோரிக்கை

கடந்த ஜூன் 24 அன்று வெனிசுலாவில் ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரு அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் வடமேற்குப் பகுதியை உலுக்கின. இந்த பயங்கர பேரிடரில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,... மேலும் பார்க்க

வேலூர்: பைக் விபத்தில் மூளைச்சாவு; 18 வயது கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் தானம்!

வேலூர், சேண்பாக்கம் செல்லியம்மன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். காஸ் ஏஜென்சியில் ஓட்டுநராக வேலைச் செய்து வருகிறார். இவரது மனைவி பவானி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். இரண்டாவது மகன் ரித்தீஷ். வய... மேலும் பார்க்க

`4 பேருக்கு நல்லதுதானே செய்யுறான், செய்யட்டும்' மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தின் சமூகசேவை; நெகிழும் தாய்

திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் வளைவு, மாலை நேரங்களில் மிகவும் பரபரப்பாகிவிடும். எந்நேரமும் வாகனங்கள் முட்டிக்கொண்டு, ஹாரன் சத்தங்கள் காதைக் கிழிக்கும். அங்கே, செய்கைகளாலேயே ஒட்டுமொத்த டிராஃபிக்... மேலும் பார்க்க