செய்திகள் :

கரூர் துயரம்: "இழப்பை ஈடுகட்ட வேண்டியது தவெகதான்; அரசு அல்ல"- அரசுப் பணிக்கு சிபிஐ எம்.பி. எதிர்ப்பு

post image

நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவை தவெக அரசு ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தி இருக்கிறார்.

கரூர் சம்பவம்
கரூர் சம்பவம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தளப் பதிவில், "அரசியல் கட்சிகளால் ஏற்பாடுசெய்து நடத்திய கூட்டங்களில் கூட்டநெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும்.

இந்த முடிவை அதிகாரத் துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும். மேலும் எதிர்காலத்தில் அரசிற்குக் கடும் நெருக்கடிகளை இந்த முடிவு ஏற்படுத்தும். இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சார்ந்ததாகும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அவைதான் அதைச் செய்ய வேண்டும். அதைச் செய்வதற்கு முழுத்தகுதி படைத்த கட்சிதான் தவெக. அந்தப் பொறுப்பை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அதை அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது. தவெக அரசு ஆழமாகச் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

வேலூர் திமுக அலுவலகத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு; 2,000 நாள்களைக் கடந்த அன்னதானம்!

வேலூரில் உள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரந்தோறும் 6 நாள்களிலும் மதிய உணவு வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு, கொரோனா நோய்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த சமயம், உ... மேலும் பார்க்க

`கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை..!' - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் பேச்சு

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். இந்தக் கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தின் மேடையில் முன்னாள் அமைச்சர் எம்... மேலும் பார்க்க

சிவகங்கை: காதல் திருமணத்திற்குப் பேரம் பேசிய எஸ்.எஸ்.ஐ; பணி ஓய்வு பெறவிருந்தவர் சிறையில் அடைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இரண்டு லஞ்ச ஊழல் சம்பவங்கள், ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.திருப்புவனம் காவல் நி... மேலும் பார்க்க

`ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு; இடைத்தேர்தலில் வச்சு வெளுத்து வாங்குங்க.!'- விஜய்யின் முழு உரை

2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர்... மேலும் பார்க்க

பூம்புகார்: வெயில் மழையில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்: எப்போதுதான் அமைக்கப்படும் பேருந்து நிறுத்தம்?

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதாகவும் காப்பியங்கள் போற்றும் முதன்மையான சுற்றுலாத் தளமாகவும் பூம்புகார் விளங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும்... மேலும் பார்க்க

'பத்திரிகைக்காரங்களாம் வெளிய போய்டுங்க.!' - முதல்வர் விஜய் கூட்டத்தில் அடாவடி காட்டிய கரூர் போலீஸ்!

முதல்வர் விஜய் கரூரில் தவெக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து காவல்துறை அடாவடி... மேலும் பார்க்க