செய்திகள் :

"வடத்துருவமும், தென் துருவமும் சேர முடியுமா?" - திருமாவளவன் கருத்துக்கு வைகோ பதில்

post image

திமுக-வுடன் நட்புடன் தொடர்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்ததற்காக அவருக்கு `நோபல் பரிசே தரலாம்' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாக தெரிவித்தார்.

`தனக்கு நோபல் பரிசு கிடைக்க பரிந்துரை செய்ததற்காக வைகோவுக்கு நன்றி' தெரிவிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதில் அளித்திருந்தார்.

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

மேலும் "ஒரு கூட்டணியிலிருந்து ஒரு கட்சி வெளியேறிவிட்டால் அந்தக் கட்சியை எதிரிக்கட்சியாக பார்க்கக்கூடிய, தவறான அரசியல் கண்ணோட்டம் தமிழக அரசியலில் உள்ளது. விலகிய பின்னரும் நட்புறவு கூடாதா, பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணியில் தவெகவும், திமுகவும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று திருமாவளவன் பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தவெக-வும், திமுக-வும் அகில இந்திய அளவில் ஒரே கூட்டணிக்குள் வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் சொல்லியிருக்கிறார் என்ற செய்தி என்னை தூக்கி வாரி போட்டது.

அதுபோல அவரது கருத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று சொன்னேன். அவரைப் புண்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வடத்துருவமும், தென் துருவமும் சேர முடியுமா? எப்படி திமுக கூட்டணியில் இருந்துகொண்டு அமைச்சரவையில் இடம்பெற முடியும். அவர் அரசியலில் வளர வேண்டும் என்று அத்தனை விதமான நிகழ்வுகளிலும் உதவி இருக்கிறேன்.

வைகோ
வைகோ

அவர் பெரிய தலைவராக வேண்டும் என்று நினைத்தேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்தான் நம்பிக்கை நட்சத்திரம் என்பதால் அவருக்கு 15 வருடங்களாக ஊக்கம் அளித்திருக்கிறேன். என்னால் இயன்ற அளவுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறேன். எதிர்காலத்திலும் அப்படித்தான் இருப்பேன்.

அவர் மீது எந்தக் கோபமோ, வருத்தமோ எனக்கு கிடையாது. நோபல் பரிசு கொடுக்கலாம் என்று நான் சொன்ன கருத்து அவரை புண்படுத்தி இருந்தால் அதனை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அவர் இந்த நாட்டின் நல்ல தலைவர்" என்று கூறியிருக்கிறார்.

`ஸ்டாலின் படத்தை குப்பையில் வீசிய தி.மு.க புள்ளி!' டு `தனுஷ் புது கட்சி?' | கழுகார் அப்டேட்ஸ்

காரியத்தை சாதித்த வைகைச் செல்வன்!"முதல்வர் முன்னால்தான் இணைவேன்..."அ.தி.மு.க-விலிருந்து விலகிய பலரும், த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் முன்னிலையில், கட்சியில் இணை... மேலும் பார்க்க

மேலூர் இளைஞர் மரணம்: நிபுணர் குழு மூலம் உடற்கூறாய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த கவிதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் சீமைராஜா. கடந்த ஜூலை 4-ல் மேலூர் காவல் ஆய்வாளர், என் மகன் சீமைராஜாவைத் தேடி என்... மேலும் பார்க்க

``அனுமனாக `ராமபிரான்’ ஜோசப் விஜய்யிடம் சேர்ப்போம்!’’ - சம்பவம் செய்த தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள்!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்தது. அதற்கு பதிலுதவியாக கிள்ளியூர் தொகுதியின் எம்.எல்.ஏ ... மேலும் பார்க்க

கரூர் துயரம்: "இழப்பை ஈடுகட்ட வேண்டியது தவெகதான்; அரசு அல்ல"- அரசுப் பணிக்கு சிபிஐ எம்.பி. எதிர்ப்பு

நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நில... மேலும் பார்க்க

''சமரச தீர்வைக் காண விரும்புகிறேன்'' - அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சன் கொடுத்த `ட்விஸ்ட்'

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான... மேலும் பார்க்க

"திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் அரசுப்பணி கிடைக்குமென்றால்.?" - சீமான்

நாளை கரூர் செல்லும் முதல்வர் விஜய் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கரூர் சம்பவத்தா... மேலும் பார்க்க