செய்திகள் :

''சமரச தீர்வைக் காண விரும்புகிறேன்'' - அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சன் கொடுத்த `ட்விஸ்ட்'

post image

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வருகிறார்.

மரியவில்சனுக்கும், அவரது தம்பிக்கும் சொத்து மற்றும் தொழில் விவகாரத்தில் நீண்ட நாட்களாகப் பிரச்னை இருந்திருக்கிறது. அதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை நெஸ்தருடன் புதுச்சேரிக்கு வந்த மரியவில்சன், தம்பி வீட்டுக்குள் உருட்டுக்கட்டையுடன் நுழைந்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்.

நிதியமைச்சர் மரியவில்சன்
நிதியமைச்சர் மரியவில்சன்

அதையடுத்து அமைச்சர் மரியவில்சனின் தம்பி மனைவி கேர்லின் கிளாட், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதன் விசாரணைக்காக அமைச்சர் மரியவில்சன் நேற்று ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அவர் ஆஜராகவில்லை.

அதில் கடுப்பான நீதிபதி, ``பலமுறை அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல், திரும்பத் திரும்ப அவகாசம் கேட்பது ஏன்?" என்று கேட்டதுடன், ஜூலை 10-ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை 10-ம் தேதிக்குத் தள்ளி வைத்திருந்தார்.

அதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாளை புதுச்சேரியில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அமைச்சர் மரியவில்சன்.

 சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அத்துடன் இந்த விவகாரத்தில் சமரச தீர்வுக்குத் தயாராக இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் அமைச்சர் மரியவில்சன். அந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அமைச்சர் மரியவில்சனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அத்துடன் ஜூலை 13-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அமைச்சர் மரியவில்சனுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

"வடத்துருவமும், தென் துருவமும் சேர முடியுமா?" - திருமாவளவன் கருத்துக்கு வைகோ பதில்

திமுக-வுடன் நட்புடன் தொடர்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்ததற்காக அவருக்கு `நோபல் பரிசே தரலாம்' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலாக தெரிவித்தார். `தனக்கு நோபல் பரிசு கிடைக்க பர... மேலும் பார்க்க

``அனுமனாக `ராமபிரான்’ ஜோசப் விஜய்யிடம் சேர்ப்போம்!’’ - சம்பவம் செய்த தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள்!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்தது. அதற்கு பதிலுதவியாக கிள்ளியூர் தொகுதியின் எம்.எல்.ஏ ... மேலும் பார்க்க

கரூர் துயரம்: "இழப்பை ஈடுகட்ட வேண்டியது தவெகதான்; அரசு அல்ல"- அரசுப் பணிக்கு சிபிஐ எம்.பி. எதிர்ப்பு

நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நில... மேலும் பார்க்க

"திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் அரசுப்பணி கிடைக்குமென்றால்.?" - சீமான்

நாளை கரூர் செல்லும் முதல்வர் விஜய் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கரூர் சம்பவத்தா... மேலும் பார்க்க

'காவல்துறை பாஜக தொண்டர்களைப் போல.!' - சொந்த கட்சி தொண்டரை அறைந்த மம்தா பானர்ஜி - என்ன நடந்தது?

நேற்று (ஜூலை 8, 2026), மேற்கு வங்கம் பாருய்பூரில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திரிணாமும் காங்கிரஸ் பேரணி நடத்தியது. அந்தப் போராட்டத்தைத் தடுக்... மேலும் பார்க்க

கரூர் விசிட் : 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் விஜய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தவெக தலைவர் விஜய் கரூர் சென்றிருந்தார். அப்போது அதிகளவு மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க