செய்திகள் :

``அனுமனாக `ராமபிரான்’ ஜோசப் விஜய்யிடம் சேர்ப்போம்!’’ - சம்பவம் செய்த தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள்!

post image

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்தது. அதற்கு பதிலுதவியாக கிள்ளியூர் தொகுதியின் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கும், மேலூர் தொகுதியின் எம்.எல்.ஏ விஸ்வநாதனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அதன் மூலம் அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறது அக்கட்சி. அதையடுத்து அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

அப்போது புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் அவர்களிடம் புதுச்சேரி சார்பில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

வீசப்பட்ட கோரிக்கை மனு

அந்த மனுவில், `புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு விரைவாக நில ஆர்ஜிதம் செய்து கொடுக்க வேண்டும், திருச்செந்தூரில் புதுச்சேரி இல்லம் கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, காவிரி நீரில் 7 டி.எம்.சி புதுச்சேரிக்கு கொடுக்க வேண்டும், சாத்தனூர் மற்றும் வீடூர் அணையில் புதுச்சேரிக்கான நீர் பங்கீட்டின்படி தண்ணீரை கொடுக்க வேண்டும், ஊசுட்டேரியை ஆழப்படுத்தி தூர் வார வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. அதைப்பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் இருவரும்,

``புதுச்சேரியும், தமிழகமும் அண்ணன் தம்பியைப் போன்றது.

அதனால் நீங்கள் கொடுத்த இந்த மனுவை அனுமனாக சுமந்து சென்று, ராமபிரானாக இருக்கும் முதல்வர் ஜோசப் விஜய்யிடம் சேர்ப்போம். உங்கள் கோரிக்கைகளை அவர் நிச்சயம் நிறைவேற்றித் தருவார்.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் கோரிக்கைகளை தனி  கவனம் எடுத்து செய்து தருவார்” என்றனர். அதைக் கேட்ட வைத்திலிங்கம் உள்ளிட்ட புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள், அகமகிழ்ந்து அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.

அதன்பிறகு அலுவலகத்தில் வந்து அமர்ந்த வைத்திலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள், `புதுச்சேரி அரசால் முடியாததை நாம் செய்யப் போகிறோம். நம் கட்சியின் தமிழக அமைச்சர்கள் அதை செய்து முடிப்பார்கள்.

கோரிக்கை மனு

அதற்கு நாம் கண்டிப்பாக தனி விழாவை எடுக்க வேண்டும்’ என்று மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர். அப்போது தமிழக அமைச்சர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்த ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்த அவர்கள், நொந்து போனார்கள்.

அது தமிழக அமைச்சர்களிடம் புதுச்சேரி காங்கிரசார் கொடுத்த கோரிக்கை மனு. அனுமனாக சுமந்து செல்வோம் என்று கூறிய தமிழக அமைச்சர்கள், அந்த மனுவை அங்கேயே வீசிவிட்டுச் சென்றிருந்தனர். அதில் ஏகத்துக்கும் அப்செட்டாகிக் கிடக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

வேலூர் திமுக அலுவலகத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு; 2,000 நாள்களைக் கடந்த அன்னதானம்!

வேலூரில் உள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரந்தோறும் 6 நாள்களிலும் மதிய உணவு வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு, கொரோனா நோய்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த சமயம், உ... மேலும் பார்க்க

`கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை..!' - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் பேச்சு

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். இந்தக் கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தின் மேடையில் முன்னாள் அமைச்சர் எம்... மேலும் பார்க்க

சிவகங்கை: காதல் திருமணத்திற்குப் பேரம் பேசிய எஸ்.எஸ்.ஐ; பணி ஓய்வு பெறவிருந்தவர் சிறையில் அடைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இரண்டு லஞ்ச ஊழல் சம்பவங்கள், ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.திருப்புவனம் காவல் நி... மேலும் பார்க்க

`ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு; இடைத்தேர்தலில் வச்சு வெளுத்து வாங்குங்க.!'- விஜய்யின் முழு உரை

2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர்... மேலும் பார்க்க

பூம்புகார்: வெயில் மழையில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்: எப்போதுதான் அமைக்கப்படும் பேருந்து நிறுத்தம்?

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதாகவும் காப்பியங்கள் போற்றும் முதன்மையான சுற்றுலாத் தளமாகவும் பூம்புகார் விளங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும்... மேலும் பார்க்க

'பத்திரிகைக்காரங்களாம் வெளிய போய்டுங்க.!' - முதல்வர் விஜய் கூட்டத்தில் அடாவடி காட்டிய கரூர் போலீஸ்!

முதல்வர் விஜய் கரூரில் தவெக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து காவல்துறை அடாவடி... மேலும் பார்க்க