செய்திகள் :

உ.பி: மாணவி பாலியல் கொடுமை வழக்கு; ஜாமீனில் வந்த குற்றவாளிக்கு மாலை அணிவித்து மரியாதை- பரவும் வீடியோ

post image

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தை சேர்ந்த சுசில் பிரஜாபதி என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். வழக்கறிஞர் ஒருவரை அறிமுகம் செய்வதாக அவர் அந்த மாணவியை அழைத்துச் சென்றார். ஹிந்து யுவ வாஹினி அமைப்பைச் சேர்ந்த சுனில் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த 9 மாதங்களாக சிறையில் இருந்த நிலையில், இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் காஜியாபாத் சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவருக்கு அவரின் ஆதரவாளர்கள் ஹீரோ வரவேற்பு கொடுத்தனர். சுசிலுக்கு மாலை அணிவித்தனர். அதோடு அவரைத் தங்களது தோளில் தூக்கி சுமந்து சென்று அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி இருக்கிறது. வெற்றி ஊர்வலத்தில் அழைத்துச் செல்வது போன்று அழைத்துச் சென்றனர். சுசில் கழுத்து நிறைய மாலைகளால் நிரம்பி இருந்தார். அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவருடன் வந்தவர்கள் இதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். இது குறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு யாரெல்லாம் வரவேற்பு கொடுத்தனர் என்பது குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா: முகாமில் திடீரென மோதிக்கொண்ட யானைகள்; இடையே சிக்கிய சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சென்னையைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா துபாரே யானைகள் முகாமைச் ச... மேலும் பார்க்க

`நான் எனது இறுதிச்சடங்கு காரியங்களை எனது கண்ணால் பார்த்துவிட்டதால்.!' - முதியவரின் விநோத செயல்

சிலர் தங்களது மரணத்திற்கு முன்பே தங்களது கல்லறை எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள். ஒரு சிலர் தங்களது கல்லறையை தாங்கள் உயிரோடு இருக்கும்போதே கட்டி வைத்துவிடுவர். ஆனால் மத்திய ... மேலும் பார்க்க

`கொடூரமானது' - கண்ணீர் சிந்திய இந்தியர்: 30 ஆண்டாக வசிக்கும் ஹோட்டல் உரிமையாளரை வெளியேற்றும் ஜப்பான்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சமீப காலமாக கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த மனீஷ் குமார் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள சைதாமா எ... மேலும் பார்க்க

18 வருட உழைப்பு, ஜப்பானில் பிறந்த குழந்தைகள்... கலங்கும் இந்தியர்! - அரசின் புதிய விதிகளால் சிக்கல்!

பிசினஸ் மேனேஜர்’ விசாஜப்பானில் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய உணவகம் ஒன்றை நடத்தி வந்த மனிஷ் குமார் என்பவரின் வாழ்க்கை, ஒரே ஒரு அரசு உத்தரவால் தலைகீழாக மாறியிருக்கிறது.தனது ‘பிசினஸ் மேனேஜர்’ விசா புதுப்பிப... மேலும் பார்க்க

H-1B விசா போர்: இந்தியத் திறமையையும் வழிபாட்டு முறையையும் குறிவைக்கிறதா அமெரிக்கா?

ஹைதராபாத்தின் ஒரு கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலைச் சுற்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் கால்களில் வேகம் இல்லை, ஆனால் கண்களில் ஒரு மாபெரும் 'அமெரிக்கக் கனவு' இர... மேலும் பார்க்க

தொழிலதிபர் அதானி மீதான வழக்கை கைவிட அமெரிக்கா முடிவு!

தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் மீது அமெரிக்காவில் லஞ்சப் புகார் எழுந்தது. இரண்டு பேரும் இந்தியாவில் சோலார் மின் திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்... மேலும் பார்க்க