பாட் கம்மின்ஸ்தான் தலைசிறந்த கேப்டன்..! தினேஷ் கார்த்திக் புகழாரம்!
ஊா்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு
திருவாரூரில் நடைபெற்ற ஊா்க்காவல் படை வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நிறைவு பெற்றன.
திருவாரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தஞ்சை, நாகை, திருவாரூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த ஊா்க்காவல் படை ஆண் மற்றும் பெண் வீரா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், 100 மீ. ஓட்டம், 4ல100 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கைப்பந்து, கபடி மற்றும் கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்கு திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிசு வழங்கினாா்.
நிகழ்வில், திருவாரூா் மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் எஸ். பழனிசாமி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பி. ராஜா, தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஊா்க்காவல் படை கமாண்டா்கள் கலந்துகொண்டனா்.