செய்திகள் :

"எங்களோட இருக்கணும்னு நினைச்சோம்" - இறந்த தந்தை உடலை 4 ஆண்டுகளாக கிளினிக்கில் வைத்திருந்த பெண்

post image

மும்பை மலாடு பகுதியில் மூடப்பட்டு இருந்த கிளினிக் ஒன்றில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது. அந்த கிளினிக்கிற்கு வெளியில் கேட்டில் 'டேகேர் சென்டர்' விரைவில் திறக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு பலகை தொங்கியது.

உள்ளே யாரும் செல்ல முடியாதபடி இரும்பு கேட் போடப்பட்டு இருந்தது. உள்ளே இருந்து வந்த துர்நாற்றம் தாங்க முடியாத காரணத்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து அந்த கிளினிக்கை திறந்து பார்த்தபோது உள்ளே குளிர்சாதன அறையில் ஒரு இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அதனை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்தபோது பல உண்மைகள் தெரிய வந்தது.

இறந்து போன அந்த நபர் கடந்த 2022ம் ஆண்டு மாரடைப்பால் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. தந்தையை நெருக்கமாக வைத்திருக்க விரும்பிய அவரது மகள், அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தார்.

இறுதிச் சடங்குகளைச் செய்து உடலைத் தகனம் செய்வதற்குப் பதிலாக, அந்தப் பெண் தனது தந்தையின் உடலைப் பாதுகாக்க தனியார் கிளினிக் ஒன்றின் உதவியை நாடி இருக்கிறார். இறந்து போன 80 வயது நபரின் வயதான மனைவி மற்றும் மகள் மும்பையில் வசிக்கின்றனர்.

மேலும் அவரது மரணத்தால் தாங்கள் மிகவும் உடைந்துவிட்டதாகவும், முடிந்தவரை நீண்ட காலத்திற்கு சடலத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவில் உள்ள கிரையோனிக்ஸ் மையத்திற்கு மாற்ற விரும்புவதாகவும் அந்த நபரின் மகள் தெரிவித்துள்ளார்.

புதுப்பிப்புப் பணிகளுக்காக அந்தக் கிளினிக் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருந்தது. போலீஸார் அந்த நபரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது இயற்கையாக இறந்ததற்கான சான்றிதழைத் தாக்கல் செய்தனர்.

மேலும் சட்டப்பூர்வமாக இறந்தவர்களின் உடல்களை மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாத்து வைக்கும் 'கிரையோனிக்ஸ்' (cryonics) தொழில்நுட்பத்தை வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து இணையத்தில் தேடி தாங்கள் அறிந்துகொண்டதாக அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த உடலை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல முடியுமா என்பது குறித்து அத்தகைய நிறுவனம் ஒன்றிடம் அக்குடும்பத்தினர் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கினர். மேலும், இந்தியாவிலேயே அந்த உடலைப் பாதுகாத்து வைப்பதற்கான சட்டப்பூர்வ அம்சங்கள் குறித்தும் அவர்கள் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையில், சடலம் கிளினிக்கில் இருந்தது குறித்து அதன் நிர்வாகமோ அல்லது குடும்பத்தினரோ உள்ளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. 2022 முதல் கிளினிக் நடவடிக்கைகளுக்காக வளாகத்தை வாடகைக்கு விட்ட உரிமையாளருக்கும் உடல் இருப்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.

பீகார்: அரசு அதிகாரிகளான தம்பதிகள் வீட்டில் ரெய்டு; ரூ.1 கோடி பணம், நகை, சொத்து பறிமுதல்

பீகாரில் பாட்னா கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் ரவீந்திர குமார் திவாகர். அவரது மனைவி குமாரி ஸ்வீட்டி, டானாபூர் மாவட்ட துணைப் பதிவாளராக இருக்கிறார். இரண்டு பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து... மேலும் பார்க்க

'வெளியில் சொன்னால் என்ன ஆகுமோ?'- Silicon Valley-யில் மறைக்கப்படும் பாலியல் சம்பவங்கள்; பகீர் பின்னணி

உலகின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மையம்தான் சிலிக்கான் பள்ளத்தாக்கு. இது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் அமைந்திருக்கிறது. உலகில் ஐ.டி படித்தவர்களின் கனவு இடம் இது ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: CISF வீரர்களிடையே வாக்குவாதம்; 4 வீரர்களைச் சுட்டுக்கொன்ற தலைமைக் காவலர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்துவா மாவட்டத்தில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) வீரர் ஒருவர் சக வீரர்களைச் சுட்டுக்கொன்றுள்ளார். என்ன நடந்தது? ஜம்மு காஷ்மீரில் ஓடும் ரவி நதியின் கிளை ஆறு சேவா நதி.... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: திமுக தொழிற்சங்க நிர்வாகியான அரசு பஸ் கண்டக்டர் வெட்டிக் கொலை; போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்ததாண்டவபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 45). இவர் அரசு பஸ்ஸில் கண்டக்டராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர... மேலும் பார்க்க

`அடையாளம் காட்டிய ஸ்கூல் பேக்' - யூடியூப்பர் மதுமிதாவின் நகை கொள்ளையில் எஸ்.பி சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூப்பர் மதுமிதா வீட்டில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டின் பின் கதவை கட்டர் மெஷின் மூலம் உடைத்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையட... மேலும் பார்க்க

சென்னை: திருமண ஆசையை காட்டி இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த இளைஞர் - சிக்கியது எப்படி?

சென்னை, அயனாவரம், புதுநகர் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய முதல் கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த... மேலும் பார்க்க