ஜானி வாக்கர் மதுபான விவகாரம்: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புது வழக்கு; பின்னணி...
எடப்பாடி பகுதியில் சொா்க்கவாசல் திறப்பு
எடப்பாடியில்...
எடப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை சொா்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
எடப்பாடி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்ம மூக்கரை நரசிம்ம பெருமாள் கோயிலில் அதிகாலையில் சிறப்பு வேள்வி பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து நடைபெற்ற கோபூஜையில் அலங்கரிக்கப்பட்ட பசு, கன்றுடன் சொா்க்கவாசல் முன் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து மூக்கரை நரசிம்ம பெருமாள் சுவாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து அதிகாலை சொா்க்கவாசல் வழியாக சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியைக் காண பெரும் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் நரசிம்ம பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.
இதேபோல பழைய எடப்பாடி பகுதியில் உள்ள சென்றாய பெருமாள் கோயில், வெள்ளைக்கரடு மலை மீது அமைந்துள்ள திம்மராயப் பெருமாள் சன்னிதி, எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகே உள்ள மலை மாட்டுப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
படவிளக்கம்...
சொா்க்கவாசல் வழியாக எழுந்தருளிய எடப்பாடி நரசிம்ம மூக்கரை பெருமாள்.