செய்திகள் :

'எடப்பாடி பழனிசாமி அதிமுக-வை பூஜ்ஜியம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' – அமைச்சர் வன்னியரசு

post image

மதுரை மாவட்டம். தீர்த்தகாடு பகுதியைச் சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் வன்னியரசு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``நீதிமன்ற உத்தரவு இருந்தும் கடந்த 40 ஆண்டுகளாக பட்டா வழங்காத நிலையில் தற்போது பட்டா வழங்கியுள்ளோம். இன்னும் 300 பேருக்கு வழங்க வேண்டியது உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டா என்பது வடிவேலு சொல்வதுபோல, `ரசீது இருக்குது கிடைத்ததைக் காணோம்' என்றது போல்தான் உள்ளது.

மனுதாரர்களுக்கு பட்டா கிடைப்பதற்கான வழிவகை செய்ய செயல்திட்டம் உள்ளது. 80 ஆண்டுகள் சுதந்திர நாட்டில் இன்றும் மனைபட்டாவிற்காக கையேந்தி நிற்பது மண்ணின் மைந்தர்கள் பூர்வ குடிகள்தான்; மேட்டுக்குடிகள் அல்ல...

இதனை தீர்க்கக்கூடிய அரசு வந்திருக்கிறது. ஜோசப் விஜய் தலைமையிலான அரசில், இதனை நாங்களே செய்கிறோம். கோரிக்கை வைக்கும் இடம் மாறி, அதனை செய்யும் இடத்திற்கு வந்திருக்கிறோம். இதுதான் முக்கியமான தலைகீழ் மாற்றம்.

கடந்த ஆட்சியில் உள்ள பிரச்னைகள் பற்றி பேச விரும்பவில்லை. மேதகு சொன்னதுபோல, சொல்லுக்கு முன் செயல் இதுதான் என்னுடைய வார்த்தை.

தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு மக்களுக்கான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு சாட்சிதான். அடித்தட்டு மக்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அமைச்சர் வன்னியரசு

சட்ட ஒழுங்கு பிரச்னை ,விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை எல்லா காலத்தில் இருக்கும் பிரச்னை-தான். அதற்காக போராடியிருக்கிறோம்.  சட்ட ஒழுங்கு பிரச்னையை எதிர்த்துப் போராடுகின்ற எதிர்க்கட்சிகள் வந்து அரசு என்ன மாதிரியாக நடக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டச் சொல்லுங்கள்... அதனைச் செய்யலாம்; போற போக்கில் அவதூறுகளை விதைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்களுக்கான வழியில் செல்கிறோம், இதனை திசை திருப்பும் வேலை வேண்டாம்.

வேங்கைவயல் பிரச்னை, சட்ட ஒழுங்கு பிரச்னை, தென் மாவட்டங்களில் நடந்த படுகொலைகள், அனைத்து பிரச்னைகளிலும் கடைசியாக கவின் படுகொலையில் நான்கு நாள்களும் அதே களத்தில் நின்று போராடினோம்.

யாரும் எங்களுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல தேவையில்லை... இன்றைக்கும் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறதோ, முரண்படும் இடத்தில் சுட்டிக்காட்டுகிறோம். நாங்கள் அமைச்சரவையில் இருப்பதால் முதலமைச்சரிடம் நேரடியாகச் சொல்கிறோம். வெளியில் போராட வேண்டிய அவசியம் இல்லை.

கவின் படுகொலை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டது. அதனை எதிர்த்து தாயார் போராட்டத்தை நடத்தும்போது உடனடியாக சென்று இதில் மறுசீராய்வு மனு போட வேண்டும் என முதலமைச்சரிடம் நேரடியாகச் சொல்லியிருக்கிறோம். இன்று மறுசீராய்வு மனு போடப்பட்டிருக்கிறது" என்றார்.

அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு குறித்த கேள்விக்கு, “எங்கள் ஊரில்தான் பேசியுள்ளார். அவர் அமைச்சராகப் பேசவில்லை, ஒரு தாயாராக பேசியிருப்பதாகக் கூறிவிட்டுத்தான் பேசியிருக்கிறார்; ஒரு தாயாருடைய பார்வையில் இருந்து பேசியிருக்கிறார்" என்றார்.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு மட்டும் முதலமைச்சர் செல்வதாக எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்த கேள்விக்கு, “முதலமைச்சர் சென்றதற்கு பின்பு அவர்கள் செல்வார்கள். தேர்தல் குறித்த செயல்பாடுகள் என்ற குற்றச்சாட்டு இருந்தால் அவர்கள் இந்த தொகுதிக்கு போகாமல் இருக்க வேண்டும். அவர்கள் செல்வார்கள்... தேர்தல் வேலை ஆரம்பித்திருக்கிறது.

முதல்வர் விராலிமலை சென்று இருக்கிறார் என்றால், இடைத்தேர்தலைத் தாண்டி மக்களுக்குச் செய்ய வேண்டிய நலத்திட்டங்களைச் செய்கிறார். இடைத்தேர்தலுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்பதுதான் என்னுடைய பார்வை."

விஜய் - திருமாவளவன்
விஜய் - திருமாவளவன்

தவெக, பாஜக-வுடன் நெருங்கியுள்ளதா என்ற எதிர்கட்சிகள் கேள்விக்கு, “பாஜக அரசு வந்தே மாதரம் பாட வேண்டும் என்று சொன்னபோது தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அரசு, தவெக அரசு. நாடு முழுவதும் யாருமே தீர்மானம் இயற்றுவதற்கு தயங்கிக் கொண்டிருந்த சூழலில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாட வேண்டும் என்று தீர்மானம் இயற்றிய அரசு தவெக அரசு.

வந்தே மாதரத்திற்கு எதிராக எந்த மாநிலத்திலும் அதைச் செய்யவில்லை. வக்பு வாரிய திருத்தம், FCRA ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தான்.

பாஜக-வோடு இணைந்து செயல்படுகிறார்கள் என்றால் பாஜக கொண்டுவந்த மிக முதன்மையான இரண்டு சட்டங்களுக்கு எதிராக ஏன் தீர்மானம் கொண்டு வரப்போகிறார்கள்?

எஸ்.ஐ.ஆருக்கு எதிரான  போராட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. திமுக அந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. கடந்த காலங்களில் இந்தியா கூட்டணியில் இணைந்து செயல்பட்டு போராட்டத்தை முன்னெடுத்த திமுக, இந்தியா கூட்டணியுடன் இணைந்து போராடவில்லை என்றாலும் தனியாகக்கூட போராடவில்லை. அதற்காக அவர்கள் பாஜக-வுடன் செயல்படுகிறார்கள் எனக் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா?"

அமைச்சர் வன்னியரசு
அமைச்சர் வன்னியரசு

விடுதிகளில் மாட்டிறைச்சி திட்டம் குறித்த கேள்விக்கு, “மாட்டுக்கறி விவகாரத்தில் மாணவர்கள் விடுதியில் ஆய்வு செய்தபோது அவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார்கள். முதலமைச்சரிடம் கூறி பரிசீலிக்கிறோம் என்றுதான் சொன்னோம். இதனை திரித்து மாட்டுக்கறி போடப் போவதாக அவதூறான விஷமப் பிரசாரங்களைகிச் செய்தனர், அது உண்மை அல்ல; இதற்குப் பின்புலமாக ஆர்.எஸ்.எஸ் உள்ளது. சனாதன கும்பல் உணவை வைத்து அரசியல் செய்யக்கூடிய இந்த வேலையைச் செய்கிறார்கள். நோக்கத்தை திசை திருப்பும் வேலைகள் வேண்டாம். இது மாணவர்கள் நலன் கருதி செயல்படக்கூடிய அரசு."

தவெக அரசுக்கு அதிமுக பூஜ்ஜியம் மதிப்பெண் தான் எனக் கூறுவது குறித்த கேள்விக்கு, ``எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக பூஜ்ஜியம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; ஒன்றொன்றாக கரைந்து கொண்டே வருகிறது.

மாநில உரிமைகளுக்காகப் பேசக்கூடிய கட்சி அதிமுக, அந்தக் கட்சி அழிந்து போகக் கூடாது... பூஜ்ஜியமாகக் கூடாது... பூஜ்ஜியம் இல்லாமல் பிளஸ் ஆக வேண்டும் என்று பிளஸ்ஸிங் பண்ணுகிறேன்."

சீமான் பொது வேட்பாளர் என்பது குறித்த கேள்விக்கு, “சீமான் பொது வேட்பாளர் என அவரே சொல்லிக் கொள்கிறார். நான்தான் அடுத்த முதல்வர் எனச் சொல்லிக் கொள்வதுபோல பேசுகிறார்; யாரும் அவரை முன்மொழியவில்லை, அவர் ஆசைப்படுகிறார். எந்த திராவிட கருத்தியலுக்கு எதிராக... பார்ப்பண கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்போம் எனச் சொன்னாரோ, அந்த கடப்பாரையை தூக்கிப் போட்டுவிட்டு திராவிட கடப்பாரையை எடுத்துக் கொண்டு தமிழ் தேசிய கோட்டையை இடிப்பதற்கு கிளம்பியிருக்கிறார்.

அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
எடப்பாடி பழனிசாமி

சீமானை போன்ற பிழைப்புவாத, சந்தர்ப்பவாத அரசியல் செய்யக்கூடியவர்கள்  யாரும் இருக்க முடியாது. 2009-க்குப் பிறகு கட்சி ஆரம்பிக்கிறார். இன படுகொலை செய்த காங்கிரஸ், இனப்படுகொலைக்கு காங்கிரஸோடு இணைந்து செயல்பட்ட திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளும் துரோகிகள் எனக் கூறி ஆரம்பித்தார். நாங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் பெரியார் கோட்பாட்டின் அடிப்படையில் திராவிட கருத்துகளை முன் வைத்தோம் அதுதான் எங்களுடைய செயல்பாடு

இந்த மாதிரியான  திராவிட கருத்தியலுக்கு எதிராக மிக மோசமாக இழிவாக பேசிவிட்டு இப்போது வந்து பேசுவது என்பது சந்தர்ப்பவாதம் இல்லையா? ஒரு எம்.எல்.ஏ பதவிக்காக கொண்ட கொள்கையை விட்டுவிட்டு போகிறீர்கள் என்றால், இதைவிட பிழைப்புவாதம் என்னவாக இருக்கும். விசிக, தமிழ் தேசிய அரசியலில் களத்தில் உண்மையாக இருக்கக்கூடியது என்பதை, புலம்பெயர் தமிழர்கள் இப்போதாவது புரிந்து கொண்டால் சரி.  

சீமான்
சீமான்

முழுமையாக திராவிட பிரியாணிக்காக கையேந்தி, தட்டேந்தி நிற்கிறார்கள் சீமான் போன்றவர்கள். வீழ்ந்து விடாத வீரம்... மண்டியிடாத மானம் எனச் சொல்லிவிட்டு, மண்டியிட்டுக் கிடக்கிறார். திராவிடத்திடம் மண்டியிட்டுக் கிடக்கிற பிழைப்புவாதி-தான் சீமான். அவரை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுதான் அம்பாசமுத்திரம் தொகுதி சொல்லக்கூடிய செய்தி."

`ஓரிடத்தை எல்லா நேரமும் ஆக்கிரமிக்க முடியாது; மக்கள் வாழ்வாதாரமும் முக்கியம்..!’ - உச்ச நீதிமன்றம்

போராட்டம் நடத்துவதற்காக ஓர் இடத்தைக் காலவரையின்றி யாரும் ஆக்கிரமிக்க முடியாது என்றும், போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில்கூட குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். பின்னர் கோவை கிளம்பிய முதலமைச்சர் விஜய், செல்லும் வழியில் கரு... மேலும் பார்க்க

பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

சொன்ன வாக்குறுதிகள் நிறைவேறவில்லை... கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை... ஆனால், தங்களின் கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து போராடிய பெரியகுரும்பத் தெரு மக்களுக்கு இப்போது தீர்வு க... மேலும் பார்க்க

ஈரோடு: சுய உதவிக் குழுக்களுக்கு நிதி இணைப்பு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய் | Album

ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோட... மேலும் பார்க்க

"இது என்ன சினிமாவா, Cut சொல்லிவிட்டு அடுத்த Take போவதற்கு?" - தவெக அரசை விமர்சித்த எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசைக் கண்டித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "வெளிசந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ... மேலும் பார்க்க

`எல்லோரும் கைவிரித்த நிலையிலும், மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து விட்டோம்!' - நெகிழும் சு.வெ

மதுரையைச் சேர்ந்த மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், ரஷ்யாவில் போர் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட எதிர்பாராத சூழலில், விசா காலம் முடிந்த நிலையில் அந்நாட்டு அதிகாரிக... மேலும் பார்க்க