செய்திகள் :

`எண்ணிக்கையில் கறார் வேண்டாம்' - ராகுலை சரிகட்டிய கார்கே? - ப.சிதம்பரம் போடும் `2028' கணக்கு!

post image

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சில தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலைக்குள் தி.மு.க வுடன் எண்ணிக்கை இறுதியாகும் என்கிற தகவல் கூட கசிகிறது. 

தி.மு.க  - காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கு  பிரதான காரணமாக இருப்பது தொகுதி எண்ணிக்கையே. இதை சரிகட்டவே இப்போது இரண்டு தரப்பிலும் வேகமாக பேச்சுக்கள் நடக்கிறது. எண்ணிக்கையை காரணம் காட்டி கூட்டணியை உடைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பு ராகுலுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளனர். 

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் கூட்டணி விசயங்களை கார்க்கே பார்த்துக்கொள்ளட்டும் என ராகுல் முடிவெடுத்துள்ளார். சோனியா, கார்க்கே இவர்களுடன் இப்போது சிதம்பரம் ஆகியோர் கூட்டணியை இறுதி செய்யும் வகையில் காய் நகர்த்தி வருகிறார்கள்.

39 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கறார் காட்டி வந்த நிலையில், தற்போது 31 இடங்களை வாங்கிக்கொள்ளும் நிலைக்கு இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் தற்போது ரெடி செய்ய உள்ள லிஸ்டில் 31 தொகுதிகளே இருக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்.  அதே நேரம் ராகுல் காந்தி 36 இடங்களை கேளுங்கள் என்று சொல்லியதற்கு, எண்ணிக்கையில் கறார் காட்ட வேண்டாம் என கார்க்கே சொல்லியுள்ளாராம்.

மற்றொருபுறம், தி.மு.க  தரப்பில் 25 தொகுதிகள் என்கிற எண்ணிக்கையை சற்று அதிகரிக்கும் மூடில் உள்ளார்கள். அதவாது 27 அல்லது 28 சட்டமன்ற தொகுதிகளை இறுதி செய்யலாம் என தி.மு.க முடிவெடுத்துள்ளது. அதே போல் ராஜ்யசபாவில் ஒரு இடத்தையும் ஒதுக்க முன்வந்துள்ளார்கள். இன்று மாலைக்குள் இதை இறுதி செய்ய வேண்டும் என சிதம்பரத்திடம் கறாராக சொல்லியுள்ளார் ஸ்டாலின். 

ஸ்டாலின் - சிதம்பரம்
ஸ்டாலின் - சிதம்பரம்

காங்கிரஸ் தரப்பில் எம்.எல்.ஏ சீட்டை குறைத்துக்கொண்டு ராஜ்யசபாவில் மேலும் இடத்தை கேட்கலாம். 2028-ல் சிதம்பரம் உள்ளிட்ட சிலரின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. அப்போது, ஒரு இடத்தை தி.மு.க விட்டு தரட்டும் என்று சொல்லியுள்ளார்கள். அதையும் சிதம்பரம் நாசூக்காக தி.மு.க விடம் சொல்லியுள்ளார். சிதம்பரம் நகர்த்திய இந்த அரசியல் நகர்வு தான் இறுதியில் காங்கிரஸ் - தி.மு.க இடையே இணக்கத்திற்கு காரணமாக இருக்கபோகிறது என்றே தெரிகிறது.!

ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 700 டேங்கர் கப்பல்கள் தவிப்பு; இந்தியாவில் LPGக்குத் தட்டுப்பாடு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை எட்டி இருக்கிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.இத்தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அ... மேலும் பார்க்க

விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! - உற்சாகம், அப்செட் - டெல்டா பரபர

விஜய் தஞ்சை விஜயம்!தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திவருகிறார். சமீபத்தில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பை முடிந்திருந்த நிலையில், வரு... மேலும் பார்க்க

``ஈரானிய மண்ணில் நடந்த படுகொலை: மோடி அரசின் மௌனம் நடுநிலை அல்ல" - கேள்விகளை அடுக்கும் சோனியா காந்தி!

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எ... மேலும் பார்க்க

`` ‘கேரளா ஸ்டோரி 2’ படத்தைத் தமிழக அரசு தடை செய்யவேண்டும், இல்லையென்றால்..!" - சீமான் எச்சரிக்கை

"இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எ... மேலும் பார்க்க

'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராடும் செல்வப்பெருந்தகை

திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் நீடித்து வரும் நிலையில் ப.சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் முதல்வரை சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 4 மணிக்கு ECR இல் மகளின் நிச்சயதார்த்தம் ... மேலும் பார்க்க