செய்திகள் :

"எனக்கு மட்டும் மகள் இருந்தா..." - MGR-ஐ கவர்ந்த ஜே.சி.டி பிரபாகர்! புது சபாநாயகரின் அரசியல் பயணம்

post image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். பதினேழாவது சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று காலை பதவி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து சட்டசபை சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கவிருக்கிறது. தவெக சார்பில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்ட ஜே.சி.டி. பிரபாகர் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு எவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி விட்டது. நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

பதினேழாவது சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அரசியல் பயணம் குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம்.

அஇஅதிமுக-வில் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி இவர். கட்சியில் முக்கியப் பதவியான 'மாநில எம்ஜிஆர் இளைஞரணி' செயலாளராக நியமித்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜிஆருக்கு இவர் மீது அளப்பரிய பாசம் உண்டு.

jcd prabakar with mgr
jcd prabakar with mgr

1980 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல். 'என்ன தவறு செய்தேன்' எனக் கேட்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் சென்றார் எம்.ஜி.ஆர்.

சென்னையில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பிரபாகர் அவரை ஆதரித்து வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்ய வந்தார் எம்.ஜி.ஆர். அந்த நள்ளிரவிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

'ஜேசிடி பிரபாகர் நல்லொழுக்கம் நிறைந்தவர். மக்கள் பணியே பிரதானமாக நினைக்கும் தூய தொண்டர்.

எனக்கு மட்டும் இறைவன் குழந்தை பாக்கியம் தந்திருந்தால் அதுவும் பெண் பிள்ளை இருந்திருந்தால் எனது மகளை பிரபாகருக்கு மணமுடித்து கொடுத்திருப்பேன். அப்படிப்பட்ட பிரபாகருக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்' என எம்.ஜி.ஆர் பேசினார்.

அவரது பேச்சைக் கேட்ட தொண்டர்கள் கண்கள் கலங்கியபடியே கை தட்டி ஆர்ப்பரித்தார்கள்.

அந்தத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார் ஜே.சி.டி

தொடர்ந்து 84 மற்றும் 89 ம் ஆண்டு தேர்தல்களில் அதே வில்லிவாக்கத்தில் நின்று தோல்வியைத் தழுவினார்.

jcd prabakar with jeyalalitha
jcd prabakar with jeyalalitha

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 2011-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவும் இவருக்கு அதே வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். அந்தத் தேர்தலிலும் வெற்றிதான்.

ஆனால் 2016ம் ஆண்டு மு.க ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அதிமுகவிலேயே தொடர்ந்தவருக்கு 2021 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வில்லிவாக்கத்திலேயே போட்டியிட் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன் பிரபாகரின் மகன் முதலில் தவெகவில் இணைந்தார். அடுத்த சில தினங்களில் பிரபாகரும் தவெகவில் சேர, அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் விஜய்.

தேர்தலில் வென்றதுடன் நாளை தமிழக 17வது சட்டசபையின் தலைவராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.

Vijay: "கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள்" - விஜய் சொன்ன 'வெள்ளை அறிக்கை' என்றால் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, அதே மேடையில் முதல் மூன்று கையெழுத்துகளைப் போட்டார் தவெக தலைவர் விஜய். அடுத்து, மக்களுக்கு சின்ன 'ஸ்பீச்'சும் கொடுத்தார். இது இரண்டுமே தமிழ்நாடு அரசியலில் ப... மேலும் பார்க்க

இபிஎஸ் vs சி.வி.சண்முகம்: சட்டசபையில் வெளிச்சத்திற்கு வந்த அதிமுக பூசல்; யாருக்கு எத்தனை MLA ஆதரவு?

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் சவாலாக அமைந்துவிடவில்லை. இந்த முடிவால் அதிமுகவும் சத்தமில்லாமல் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதிமுக தொடங்கிய கால... மேலும் பார்க்க

நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு: தவெகவிற்கு அடுத்த டெஸ்ட்; 'முதல்வர்' விஜய்க்கு இன்னும் ஒரு செக்

பெரும்பான்மைக்காக பிற கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை... ஆளுநருடன் சந்திப்பு... ஆட்சி அமைக்க உரிமைக் கோருதல்... ரிப்பீட்டு - இதுதான் தவெக தலைவர் விஜய்யின் கடந்த வார ரோட்டீனாக இருந்தன. இவை அத்தனையைய... மேலும் பார்க்க

'தங்கம் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள்' - பிரதமர் மோடியின் கோரிக்கையை வலியுறுத்திய ஆளுநர்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

ஈரான் சிறையில் நேர்ந்த கொடுமைகள்; `அமைதி’ நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதி ஜாமீனில் விடுதலை!

ஈரானின் எவின் (Evin) சிறைச்சாலை உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்று. அந்த இருண்ட சுவர்களுக்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது என்றால், அது நர்கீஸ் முகமதி என்ற மனித உரிமைப் போ... மேலும் பார்க்க

"உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறோம்... காப்பீடு வசதி கூட இல்லை" - டெலிவரி பணியாளர்கள் வேதனை

இன்றைய நம் நவீன வாழ்வில் 'விரைவு டெலிவரி' என்ற வசதி சாதரணமான முன்னேற்றமாகத் தோன்றினாலும், அதன் பின்னால் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கூடிய மக்களின் உழைப்பு சாதரணமானது அல்ல. குடும்பச் சூழலினால் இளம் வயதிலே... மேலும் பார்க்க