அஜித் பவார்: இளம் பெண் பைலட் சாம்பவி பதக் டு கேப்டன் சுமித் கபூர்! - விமானிகளின்...
``என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது; தடைகளை எதிர்கொள்வார்!” - எஸ்.ஏ.சந்திரசேகரன்
திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் செந்தில்பாண்டியன் இல்லத் திருமணத்தில் தவெக தலைவர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், நாட்டு நலனை காக்கவும், உண்மையான விடுதலையை கொடுக்கவும் சர்வீஸ் செய்வதற்காக புதியவர் யாராவது வந்தால் இடையூறு ஏற்படுவது வழக்கம். இதில் ஆச்சரய்ப்படுறதுக்கு ஒன்றுமில்லை. ஜெயிக்கணும் என்றால் இதையெல்லாம் பேசணும்.

ஜனநாயகன் ஏன் ரிலீஸ் ஆகவில்லை இதில் அரசியல் இருக்கா, இல்லையானு எல்லோருக்கும் தெரியும். மாற்றத்தை ஏற்படுத்த ஒரு இணைஞன் வரும் போது அது நல்லதா, நியாயமானு யாரும் பேசுவதில்லை. இதெல்லாம் சரித்திரம் மாற்ற முடியாது. மாற்றத்தை உருவாக்கு வருபவர்கள் இது போன்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டும். விஜய், இதுமாதிரி எவ்வளவோ தடைகளை எதிர் கொள்வார்.
ஜனநாயகன் - மக்களுக்கு தெரியும்
ஜனநாயகன் ஏன் ரிலீஸ் ஆகவில்லைனு மக்களுக்கு தெரியும். தெருவில் செல்லும் ஒரு பெண்ணிடம் கேட்டால் சொல்வார். கரூரில் என்ன நடந்ததுனு மக்கள் சொல்கிறார்கள். நான் சொன்னால் விஜயின் அப்பா என்பதால் சொல்கிறார் என்பார்கள். ஐந்து வருடத்திற்கு முன் இருந்த மக்கள் இப்போது இல்லை. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு இளைஞர்கள், வயதான பெண்கள் கூட அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர். ரூ.3,000 கொடுத்தாலும் 5,000 கொடுத்தாலும் ஓட்டு அங்கேதான் போடுவோம் என்கிறார்கள் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
பணத்தால் மக்களை விலைக்கு வாங்கலாம் என நினைக்கின்றனர்... அது நடக்காது. கட்சி ஆரம்பித்து போராட வரும் விஜய்க்கு எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் பயம் இல்லை. எனக்கும் எந்த பயமும் கிடையாது. என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது.
காங்கிரஸ் கட்சிக்கு என ஒரு சரித்திரம், வரலாறு இருக்கிறது. சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் கட்சி தற்போது தேய்ந்து போயிருக்கிறது. ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து தேய்ந்து விட்டனர். அந்த பவரை விஜய் கொடுக்கிறேன் என்கிறார். காங்கிரஸ் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்றார்.













