செய்திகள் :

"என் தம்பி எனக்கு போன் செய்வதே இல்லை.!"- பிரம்மானந்தம் குறித்து உருக்கமாகப் பேசிய சகோதரர்

post image

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் மூத்த சகோதரர் ஸ்ரீ வதன் தனக்கும், தனது சகோதரருக்கும் (பிரம்மானந்தம்) இடையேயான உறவு குறித்து உருக்கமாகப் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் பிரம்மானந்தத்தின் சகோதரர் ஸ்ரீ வதன் ," நாங்கள் உடன்பிறந்தவர்கள். நான்கு பேர் இறந்துவிட்டனர், இப்போது நாங்கள் இருவர் மட்டுமே எஞ்சியிருக்கிறோம்.

பிரம்மானந்தம்
பிரம்மானந்தம்

எங்கள் சொந்த ஊரில் நான் மட்டுமே தனியாக வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் அவர் இந்த ஊருக்கு வந்திருந்தார், ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றுவிட்டார்.

'அண்ணா, எப்படி இருக்கிறாய்?' என்று எனது தம்பி என்றாவது ஒரு நாள் போன் செய்து கேட்பான் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் அவர் எனக்கு போன் செய்வதே இல்லை.

அவர் ஒரு பெரிய நடிகர். படப்பிடிப்புகளில் அவர் பிஸியாக இருக்கலாம், ஆனால் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி போன் செய்து பேசக் கூடாதா?. பெரிய மனிதர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்" என்று பேசியிருக்கிறார்.

"விஜய் தேவரகொண்டாவின் தம்பியிடம் மக்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ..." - ஆனந்த் தேவரகொண்டா

'தொரசானி' படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆனந்த் தேவகொண்டா. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் இவர். Anand Devarakondaஅவர் சினிமாவுக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை ஒட்டி... மேலும் பார்க்க

"அன்பைப் பரப்புவதே என்னுடைய புரட்சி!" - விமர்சனங்களுக்கு பதிலடி தந்த 'சிக்மா' பட நடிகை ஃபரியா

டோலிவுட்டில் 'ஜதி ரத்னாலு' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபரியா அப்துல்லா. தற்போது இவர் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத்தில்... மேலும் பார்க்க

``நான் செல்ஃபி கூட எடுப்பதில்லை" - நடிகர் நாகர்ஜுனா ஓபன் டாக்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோ "சுரக்ஷா கா திரங்கா" சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்வில் நடிகர் நாகார்ஜுனா கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் உரைய... மேலும் பார்க்க

``சொத்துகளைப் பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிடுங்கள்" - மூத்த நடிகரின் ஆசையும் குடும்பத்தாரின் முடிவும்!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ரங்கநாத் (66) தற்கொலையைத் தொடர்ந்து அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என அவரின் மகன் தெரிவித்திருக்கிறார். 1949-ல் சென்னையில் பிறந்த இ... மேலும் பார்க்க

Anupama: "என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" - செய்தியாளரின் கேள்விக்கு அனுபாமா பதில்

தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரனுக்கு 'கிரேஸி கல்யாணம்' படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அனுபமா பரமேஸ்வரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரு... மேலும் பார்க்க

ராஷ்மிகா மந்தனாவுக்குப் படுகாயம்; 6 வாரங்கள் ஓய்வெடுக்க சொன்ன மருத்துவர்கள்; என்ன நடந்தது?

நடிகை ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்திருக்கிறார். இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'மைசா' படத்த... மேலும் பார்க்க