செய்திகள் :

"என் மகனை உயிருடன் வைத்திருக்க இதைச் செய்தேன்"- ஐஐடி-யில் தற்கொலை செய்த மகனுக்கு கோயில் கட்டிய தந்தை

post image

கடந்த 2024ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் அக்ஷித் பூக்யா என்ற இரண்டாம் ஆண்டு மாணவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் ஒருக்கிணைப்பாளராக பூக்யா செயல்பட்டார். அதில் ஐ.ஐ.டியின் லோகோ அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக பூக்யாவிற்குத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிர்வாகம் நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தது.

எனவே அந்த நெருக்கடி காரணமாக அதே ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலை குறித்து இதுவரை வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஹனம்கொண்டாவில் வசிக்கும் சமூகவியல் ஆசிரியரும், பூக்யாவின் தந்தையுமான ஹேமந்த் பூக்யா தனது மகன் நினைவாக அவரிம் சொந்த ஊரில் கோயில் ஒன்றைக் கட்டி இருக்கிறார்.

தற்கொலை
தற்கொலை

இது குறித்து ஹேமந்த் அளித்த பேட்டியில், ''கொரானா தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட லாக்டவுன் காலத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ என் மகன் ஆலோசனை வழங்கினான்.

அவர் தற்கொலை செய்து கொண்டால், அவர் மீது மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். போலீஸ் விசாரணையில் பல்வேறு தடைகள் இருப்பதால், அக்ஷித்தின் மரண வழக்கில் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.

இதற்காக இறுதிவரை போராட முடிவு செய்துள்ளேன். எனது மகன் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர். மனவலிமையான ஆளுமை கொண்டவர்.

அவரது நம்பிக்கைகள் மங்கி வருவதால், அவரது நினைவாக அக்ஷித்தை உயிருடன் வைத்திருக்க முடிவு செய்து எங்களது சொந்த கிராமமான சந்தியா தாண்டாவில் ஒரு கோயிலைக் கட்ட முடிவு செய்தேன். நான் எட்டு மாதங்களுக்கு முன்பு இந்தக் கோவிலைக் கட்டினேன், ஒவ்வொரு நாளும் என் மகனைச் சந்திக்க வருகிறேன்.

என் நினைவிலும், இன்னும் அதிர்ச்சியில் இருக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்காகவும், குறிப்பாகச் சிகிச்சையிலிருக்கும் என் மனைவிக்காகவும் நான் இதைக் கட்டினேன். இது எங்களுக்குத் தொடர்ந்து செல்வதற்கு வலிமை அளிக்கிறது.

இந்த வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்று குற்றம் சாட்டினார்.

மகனுக்காக கோயில் கட்டிய தந்தை
மகனுக்காக கோயில் கட்டிய தந்தை

ஹேமந்தின் குடும்பத்தினர் தவறாமல் கோயிலுக்குச் செல்கிறார்கள். அங்கு அக்ஷித்தின் புகைப்படம் அவர்கள் இழந்த மகனின் நினைவூட்டலாக உள்ளது. அக்ஷித் போபாலில் உள்ள மௌலானா ஆசாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணினி அறிவியலில் பிடெக் பட்டதாரி ஆவார். 2023 இல் ஐஐஎம்ஏவில் சேருவதற்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக மென்பொருள் எஞ்சினியராகப் பணியாற்றினார்.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க