Ind v Eng : '13 மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஷமி' - அறிவிக்கப்பட்ட இந்த...
என் ரசிகர்களை வரம்பில்லாமல் நேசிக்கிறேன்: அஜித்
நடிகர் அஜித் குமார் தன் ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதற்காக, துபையில் பெரிய அளவில் ’அஜித் குமார் ரேசிங்’ என்கிற பெயரில் கார் பந்தயம் துவங்கவுள்ளது. இதற்கான, பல முன்னணி வீரர்களுடன் அஜித்தும் கார் ஓட்ட உள்ளது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: இதிலும் வெற்றி கிடைக்கட்டும்... அஜித்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
இந்த நிலையில், பயிற்சிக்கு இடையே நடிகர் அஜித் குமார் பேட்டி ஒன்றைக் கொடுத்தார். அதில், “நடிப்பும் கார் பந்தயமும் உடலுழைப்பையும் உணர்ச்சிகளையும் கோரும் வேலைகள். அதனால், பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்வதை வெறுக்கிறேன். ஒரு சமயத்தில் ஒரு விஷயத்தின்மேல் மட்டும் கவனம் செலுத்தலாம். இது பல வழிகளிலும் சிறப்பாக இருக்கும். ” என்றார்.
அஜித் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரின் ரசிகர்கள் ‘தல... ஏகே...’ எனக் கத்தியதைப் பார்த்த அஜித் பேட்டி எடுத்தவரிடம், “என் ரசிகர்களைப் பாருங்கள். நான் அவர்களை நிபந்தனையில்லாமல் நேசிக்கிறேன்” எனக் கூறினார். இதனால், உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் இந்த விடியோவை வைரலாக்கி வருகின்றனர்.