செய்திகள் :

'என் வீட்டுல 22 வருசமா வேலை பார்க்குறாங்க'- பணிப்பெண்ணை விஜய்யிடம் அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி

post image

டெல்லியில் நேற்று (16.11.2026) நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அப்போது விஜய்யைச் சந்தித்த பிரியங்கா காந்தி தன்னுடைய பணிப்பெண்ணை அவரிடம் அறிமுகப்படுத்தி அவருடன் புகைப்படம் எடுக்க வைத்திருக்கிறார்.

விஜய் - பிரியங்கா காந்தி
விஜய் - பிரியங்கா காந்தி

சோனியா காந்தியின் சுயசரிதை நூலான 'Belonging' நூலின் வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடந்திருந்தது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் விஜய்யும் கலந்துகொண்டார்.

விஜய்க்கு ராகுல் காந்தி அருகே முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா இருவரும் மேடையேறி புத்தகத்தை வெளியிட்டனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் முதல்வர் விஜய்யைச் சந்தித்த, பிரியங்கா காந்தி கடந்த 22 ஆண்டுகளாக தனது இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை விஜய்யிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். 'அந்தப் பெண்ணுக்கு விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை' என பிரியங்கா காந்தி விஜய்யிடம் கூறியிருக்கிறார்.

விஜய் - பிரியங்கா காந்தி
விஜய் - பிரியங்கா காந்தி

இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட விஜய், அப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவரிடம் நலம் விசாரித்து ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசியும் அனுப்பியிருக்கிறார்.

SIR: `உ.பி-யில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்'- விளக்கம் கேட்ட யோகி ஆதித்யநாத்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு உத்தரப்பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது ... மேலும் பார்க்க

கோவை: பெண்ணிடம் தகராறு செய்த தவெக நிர்வாகி – கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நாட்டில் இன்னும் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.பெரும்பான்மை பெறாத இஸ்ரேல் கட்சிகள்இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசட்டில் பெரும்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்...'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும் விவகாரம், பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் ... மேலும் பார்க்க

'மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கோரிய பிரணாப் முகர்ஜி!' - என்ன சொல்கிறார் சோனியா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி 'Belonging' என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் அரசியல்ரீதியாக குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கு... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பெரிய ஏரி: சுகாதாரச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; குப்பைகளை அகற்றிய நிர்வாகம்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது திருப்பத்தூர் பெரிய ஏரி. மீன்பிடித் தொழில், விவசாயப் பாசனம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த ஏரி, குப்பைகள் கொட்டப்படும... மேலும் பார்க்க