செய்திகள் :

`எப்படி ஜெயிக்குறாங்கனு பார்த்துடுறேன்!' - தலைநகர் உள்ளடி டு சீட்டுக்கு 2 ஸ்வீட் பாக்ஸ்! | கழுகார்

post image

தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக, சிட்டிங் மேயர் சண்.இராமநாதன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இராமநாதன் தன்னுடைய மேயர் பதவியைக் கடந்த ஏப்ரல் 6-ம் தேதியே ராஜினாமா செய்திருக்கிறார். ஏற்கெனவே பஞ்சாயத்துக்குப் பஞ்சமில்லாத தஞ்சையில் இப்போது யார் புதிய மேயர் என்ற ரேஸ் சூடு பிடித்திருக்கிறது. சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி எல்லா தரப்பிலும் கடுமையாக முட்டி மோதுகிறார்.

இன்னொரு பக்கம், சண்.இராமநாதன் தி.மு.க கவுன்சிலர்கள் பலரையும் தனித் தனியாக அழைத்து, 'யார் வார்டுகளில் அதிக வாக்குகளை வாங்கி தருகிறீர்களோ... அவர்களுக்கு மேயர் பதவியை தலைமையில் பேசி வாங்கி தருவேன்' என்று கிளப்பிவிட்டிருக்கிறார். இதை நம்பி மேயர் ஆகும் ஆசையில் கவுன்சிலர்கள் வாக்குகளை பெற்றுக் குவிக்க சுழன்று வருகிறார்கள்.

திருநெல்வேலியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், 'சில பல கோடிகளைக் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை தி.மு.க பையில் போட்டுக்கொண்டது. உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது' என்று பேசியது கதர்களை உஷ்ணமாகியிருக்கிறது.

கடைசி வரை கூட்டணிக்கு வருவதாகப் போக்கு காட்டி ஏமாற்றிய காங்கிரஸைப் போட்டுப் பார்க்க முடிவு செய்திருக்கிறதாம் த.வெ.க. அதிலும், காங்கிரஸுக்குக் கணிசமான வாக்குகள் இருக்கும் கடைக்கோடி மாவட்டங்களில் இந்த திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார் விஜய். தி.மு.க கூட்டணி மீதான வெறுப்பில் இருக்கும் காங்கிரஸ் வாக்குகளை தங்களுக்கு மடைமாற்றவே இப்படி ஒரு உத்தியைக் கையாள தொடங்கியிருக்கிறது விசில் கட்சி.

ஒவ்வொரு தொகுதியிலும் பிரதானக் கட்சி வேட்பாளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயர் கொண்ட நபர்களைத் தேர்தலில் சுயேச்சையாகக் களமிறக்குவது வழக்கமான ஒன்று. இம்முறை, சீட் கிடைக்காத விரக்தியில் தனி செல்வாக்கு கொண்ட பலரும் பல்வேறு தொகுதிகளில் சுயேச்சையாக தேர்தலில் இறங்கியிருப்பது பிரதான வேட்பாளர்களைக் கலக்கமடையச் செய்திருக்கிறது.

களத்தில் நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், 'யார் எங்கே எப்படி வாக்குகளைப் பிரிப்பார்கள், ஒட்டுகள் எப்படி சிதறும்...' என்றே தெரியாத நிலை நீடிக்கிறது. இந்தச் சூழலில், சுயேச்சை வேட்பாளர்களும் வாக்குகளைப் பிரிப்பதால் இரு கழகங்களையும் சேர்ந்த வேட்பாளர்கள் அரண்டு போயிருக்கிறார்களாம். பல தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்களை அமைதி ஆக்குவதற்கு டீல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தென்மாவட்டம் ஒன்றில், மலர்க் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் 'புல்லாங்குழல்' பிரமுகர், சீட் பெறுவதற்காக இரண்டு ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்திருப்பது தற்போது வெளிச்சமாகியிருக்கிறது.

மலர்க்கட்சியின் மேலிடப் பார்வையாளர் ஒருவருக்கு ஸ்வீட் பாக்ஸ்களை படியளந்திருக்கும் அந்த 'புல்லாங்குழல்' பிரமுகர், தொகுதிக்குள் ஓட்டுக்கு பசையை வாரி இறைக்கவும் தயாராகிறாராம். கட்சி சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் நிதி பிரித்து தரப்படவுள்ள சூழலில், அந்த 'புல்லாங்குழல்' பிரமுகரின் பயோடேட்டாவை எடுத்திருக்கிறது மத்திய உளவுத்துறை.

அதில், அந்த பிரமுகர் மீதிருக்கும் பழைய வழக்கு விவரங்களும் தெரியவரவே, 'இப்படிப்பட்டவருக்கு ஏன் சீட் அளித்தார்கள்... ஓட்டுக்குப் பசை கொடுத்தாலும் ஜெயிக்க வாய்ப்பில்லை' என்று ரிப்போர்ட் அளித்துவிட்டார்களாம். அதுதொடர்பான விசாரணையில்தான், மேலிட பார்வையாளரிடம் ஸ்வீட் பாக்ஸ்கள் அளிக்கப்பட்டதெல்லாம் தெரியவந்திருக்கிறது. அவர்மீது டெல்லி மேலிடம் கடும் கோபத்தில் இருக்கிறதாம்.

தலைநகரில், ரயில்கள் வந்து நிற்கும் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவருக்கு, மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை சூரியக்கட்சி. ஏரியா மாண்புமிகுவின் ஆதரவாளருக்கு சீட் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த கடுகடுப்பில் இருக்கும் அந்த எம்.எல்.ஏ., வேட்பாளருக்கு எதிரான உள்ளடி வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம்.

அவருக்கென தொகுதிக்குள் பெரிய செல்வாக்கு இல்லை என்றாலும், ஒரு சில வட்டச் செயலாளர்களைப் பிடித்து, ஓட்டுக்குப் பசை செல்வதில் குழப்பம் விளைவிக்க திட்டம் தீட்டுகிறாராம். 'எனக்கு சீட் இல்லைனு சொல்லிட்டாங்கல்ல, எப்படி ஜெயிக்குறாங்கனு பார்க்குறேன்...' என்று கருவிக்கொண்டு திரிகிறாராம் அந்த எம்.எல்.ஏ. 'அமைதியாக இருந்தால் ஆட்சி அமைந்தவுடன் வாரியமாவது தருவார்கள். இப்படி உள்ளடி வேலை செய்தால், கிடைப்பதும் பறிபோய்விடும். புரிந்துகொள்ளாமல் அரசியல் செய்கிறாரே...' என்று நொந்து கொள்கிறார்கள் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள்.

`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவான... மேலும் பார்க்க

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க